மூன்றாவது முறையாக சாதித்த இந்திய அணி... டெஸ்ட் தரவரிசையில் அசத்தும் கோலியின் படை

India win Test Championship title for third successive year

by Sasitharan, Apr 1, 2019, 21:18 PM IST

தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் ஒன்றாம் தேதி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் அணிக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் சாம்பியன்ஷிப் பட்டம் அளிக்கப்படும். சாம்பியன் ஷிப் என்பதை உணர்த்தும் வகையில் தண்டாயுதம் ஒன்றும் வழங்கப்படும். கடந்த இரு ஆண்டுகளாக இந்த பட்டத்தை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த முறையும் பட்டத்தை வென்றுள்ளது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 116 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டது. விராட் கோலிய தலைமையிலான இந்திய அணி வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் டெஸ்ட் போட்டிகளில் பெற்ற வெற்றியால் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வந்தது.

கடந்த ஆண்டில், தென் ஆஃப்ரிக்காவில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை இழந்தது. அதற்கு முன்பு, இங்கிலாந்திடம் 1-4 என தொடரை இழந்தது. இருந்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. இதேபோல் வெஸ்ட் இண்டீஸ் உடன் டெஸ்ட் தொடர் வெற்றி என தரவரிசையில் முதலிடத்தில் இந்திய அணி இருந்தது. சாம்பியன்ஷிப்பை தக்கவைத்துள்ள இந்திய அணிக்கு சுமார் ரூ.7 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.

You'r reading மூன்றாவது முறையாக சாதித்த இந்திய அணி... டெஸ்ட் தரவரிசையில் அசத்தும் கோலியின் படை Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை