ரிஷப் பான்ட் குறித்து தென்னாப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக் தற்போது பேசியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனில் நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரர்களின் பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பான்ட்டும் ஒருவர். இதனை முன்னாள் வீரர்களும் பலரும் எடுத்துக்கூறி வருகின்றனர். அதற்கு ஏற்றார்போல முதல் போட்டியிலேயே அதிரடியாக செயல்பட்டார். முதல்போட்டியில் மும்பை பந்துவீச்சாளர்களை திணறடித்த அவர் 18 பந்துகளில் அரை சதம் எடுத்ததுடன் கடைசி ஓவர்களில்பான்ட் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளாக விளாசி 27 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். அவரின் அதிரடியால் தான் மும்பை அணி இமாலய இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியது. இதனால் இந்த சீசனில் அச்சமளிக்கக்கூடிய வீரராக வலம் வருவார் என முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர்.
இந்நிலையில் ரிஷப் பான்ட் குறித்து தென்னாப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக் தற்போது பேசியுள்ளார். டெல்லி அணியில் இடம்பிடித்துள்ள அவர் கூறுகையில், ``நான் ரிஷப் உடன் இணைந்து விளையாடியுள்ளேன். ரிஷப்பை பொறுத்தவரை மிகவும் குறுகிய காலத்தில் விரைவாக வளர்ந்துள்ளதை பார்க்கிறேன். தனது ஷாட்டில் அதிக வலிமையை பெற்றிருக்கும் ரிஷப் பந்த் இந்திய அணியின் மிகப்பெரிய சொத்தாக வளர்ந்து வருகிறார்" எனப் புகழ்ந்து பேசியுள்ளார்.