அசுரன் படம் குறித்த முக்கிய சீக்ரெட்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தயாராகிவரும் படம் அசுரன். இப்படம் குறித்த பல தகவல்கள் தற்பொழுது கிடைத்துள்ளது.

அசுரன்

வடசென்னை படத்துக்குப் பிறகு, வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் அசுரன். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்பொழுது நடந்துவருகிறது. படத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியர், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகர் பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

அடுத்தடுத்து பல போஸ்டர்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் படம் குறித்த தகவலை போட்டு உடைத்துள்ளார். என்னவென்றால் , படத்தில் தனுஷூக்கு இரட்டை வேடம். ஒரு கேரக்டர் தந்தையாகவும், மகன் கேரக்டரில் மகனாகவும் நடிக்கிறார் தனுஷ்.  40 வயது தாண்டிய தந்தை கேரக்டருக்கு ஜோடியாக தான் மஞ்சுவாரியர் நடிக்கிறாராம்.

சமீபத்தில்  ஒரு மலையேறும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாம். மலையேற 3 மணிநேரம், இறங்க 3 மணிநேரம் நடுவில் இரண்டு மணிநேரம் மட்டுமே படப்பிடிப்பு எடுக்க வேண்டிய சூழல். அந்த காட்சிக்கு தனுஷ் எந்த சலிப்பும் காட்டாமல் நடித்து கொடுத்தாராம். ஏனெனில் மலையேறுவதிலேயே முழு எனர்ஜியும் போய்விடும். ஆனாலும் அதையெல்லாம் தாண்டி பிரமாதமாக நடித்துமுடித்திருப்பதாக தெரிவித்துள்ளார் வெற்றிமாறன்.

பூமணியின் வெக்கை நாவலை மையா வச்சு தான் படத்தை இயக்கிவருகிறார் வெற்றிமாறன். நீண்ட நாட்களுக்குப் பிறகு வெற்றிமாறன் - தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் உருவாகும் படமென்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds