சத்துத் தரும் பேரிச்சைப்பழம் மில்க் ஷேக் ரெசிபி

Dates MilkShake Recipe

by Isaivaani, Apr 2, 2019, 22:50 PM IST

உடலுக்கு மிகவும் சத்துத் தரும் பேரிச்சைப்பழம் மில்க் ஷேக் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பேரிச்சைப்பழம் - 200 கிராம்

பால் - 200 மி.லி.,

தேன் - 1 தேக்கரண்டி

செய்முறை:

முதலில், கொட்டை நீக்கிய பேரிச்சைப்பழத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அவை மூழ்கும்படி சுடி தண்ணீர் ஊற்றி சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு, மிக்ஸி ஜாரில் தண்ணீருடன் பேரிச்சைப்பழம், பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

இதனை தம்ளரில் ஊற்றி, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சுவைத்தால் அடடே.. அபார சுவையில் சத்து நிறைந்த பேரிசைப்பழ மில்க் ஷேக் ரெடி..!

விரும்பினால், பேரிச்சைப்பழம் மில்க் ஷேக்கை கொஞ்சம் நேரம் பிரிட்ஜில் வைத்து பிறகு பருகலாம்.

சுவையான.. சுலபமான.. சத்தான பேரிச்சைப்பழம் மில்க் ஷேக் ரெடி..!

You'r reading சத்துத் தரும் பேரிச்சைப்பழம் மில்க் ஷேக் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை