ம்ம்ம்.. உருளைக்கிழங்கு சமோசா ரெசிபி

Yummy Samosa Recipe

by Isaivaani, Apr 4, 2019, 22:30 PM IST

வீட்டிலேயே ஈசியா செய்யக்கூடிய உருளைக்கிழங்கு சமோசா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வேக வைத்த உருளைக்கிழங்கு - 3

சீரகம் - அரை டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

பச்சை பட்டாணி - அரை கப்

கோதுமை மாவு - அரை கப்

மைதா மாவு - அரை கப்

ஓமம் - 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1

மல்லித் தூள் - அரை டீஸ்பூன்

கரம் மசாலா - அரை டீஸ்பூன்

சீரகத் தூள் - அரை டீஸ்பூன்

மிளகுத் தூள் - கால் டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சைப் பழ சாறு - பாதி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில், கோதுமை மாவு, மைதா மாவு, ஓமம், உப்பு, 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும். பிறகு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில், வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு, சீரகம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

அத்துடன், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, சீரகத் தூள், மிளகுத்தூள், கொத்தமல்லி, எலுமிச்சைப்பழ சாறு, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

ஊற வைத்த மாவை எடுத்து சப்பாத்தி போன்று உருட்டவும். இதனை இரண்டாக வெட்டிக் கொள்ளவும். இதன் ஒரு பகுதியை எடுத்து கோன் வடிவில் மடித்து ஒட்டவும்.

அதனுள், உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து ஒட்டிவிடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தயாராகவுள்ள சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான உருளைக்கிழங்கு சமோசா ரெடி..!

You'r reading ம்ம்ம்.. உருளைக்கிழங்கு சமோசா ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை