இரவில் சாப்பிடுவதற்கு தாமதமா? மாரடைப்பு வருமாம்!

இரவு உணவை தாமதமாக சாப்பிடுகிறவர்களுக்கும் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கும் இதய கோளாறுகள் வரக்கூடும் என்று பிரேசில் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டவர்கள் இந்த விஷயத்தில் அதிக கவனமாக இருக்கவேண்டுமாம். ஏற்கனவே இதயத்தில் பிரச்னை உள்ளவர்கள், காலை உணவை சாப்பிடாமல் விடுவது, இரவு தாமதமாக உண்பது போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை கடைபிடிப்பது அபாயம் என்றும், படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்ளவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


பிரேசில் நாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களை கொண்டு ஓர் ஆய்வு செய்யப்பட்டது. சராசரியாக 60 வயது கொண்ட 113 இதய நோயாளிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். அவர்களுள் 73 விழுக்காட்டினர் பெண்களாவர். இவர்களுள் 58 விழுக்காட்டினர் காலை உணவை தவிர்ப்பதாகவும் 51 விழுக்காட்டினர் இரவு தாமதமாக சாப்பிடுவதாகவும் 41 விழுக்காட்டினர் இரண்டையும் செய்வதாகவும் தெரிய வந்தது. காலை உணவை தவிர்ப்பது, இரவு தாமதமாக சாப்பிடுவது ஆகிய தவறான வாழ்க்கை முறையால் இரண்டாவது முறையாக மாரடைப்பு வரக்கூடிய வாய்ப்பு நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகமாவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இதய பலவீனம் உள்ளவர்கள் இந்த காரியங்களில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

தேர்தல் பணிக்காக வந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்