இப்போதானே பேசினார்...? - மாரடைப்பின் காரணங்கள்

Advertisement

பரந்தாமனுக்கு 45 வயது. அதிகாலையில் நெஞ்சுக்குள் ஏதோ செய்வதுபோல உணர்ந்தார். வாயு தொல்லையாக இருக்கும் என்று நினைத்து மனைவியிடம் கூறினார்.

"காலைல சாப்பிட்டதும் உடனே டாக்டர்கிட்டே போய் செக் பண்ணிடணும்," என்றார் அவர் மனைவி. 

பரந்தாமன் சிறிதளவு நீர் அருந்திவிட்டு படுத்துக் கொண்டார். மீண்டும் அவர் எழும்பவே இல்லை.

"நேத்து ராத்திரிதானே பேசினேன்...?"

"ரெண்டு நாளைக்கு முன்னால கல்யாணவீட்ல ஒண்ணாதான் சாப்பிட்டோம்"

என்று அதிரும் அளவுக்கு மாரடைப்பு திடீரென உயிரைப் பறித்து விடுகிறது.

மாரடைப்பின் அறிகுறிகள்:

கைகள், முதுகுக்கு பரவும் நெஞ்சு வலி: மார்பின் நடுப்பக்கத்தில் வலி உருவாகி, அது கைகள், கழுத்து மற்றும் முதுகு ஆகியவற்றுள் ஏதாவது ஒரு பகுதிக்கு பரவினால் எச்சரிக்கையடையுங்கள். ஏதாவது வேலை செய்தால் நெஞ்சு வலி அதிகரிப்பதும் மாரடைப்பின் அறிகுறிதான். இதய வலியோடு வியர்வை, தலைசுற்றல் மற்றும் நினைவிழப்பு ஆகியவை இருத்தல். சிலருக்கு அடிவயிற்றில் வலி மற்றும் வாந்தி ஆகியவையும் இருக்கக்கூடும்.

மூச்சுவிட இயலாமை: வேலை செய்யும்போது அல்லது படுத்திருக்கும்போது மூச்சு விட சிரமமாக இருப்பதும் இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

படபடப்பு: நெஞ்சு படபடப்புடன் தலைசுற்றல், நினைவிழப்பு ஆகியவையும் வருவது இதய கோளாறின் காரணமாக இருக்கக்கூடும்.

இதய நோய்க்கான காரணங்கள்

சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு, புகை பிடித்தல், இரத்தக் கொதிப்பு என்னும் உயர் இரத்த அழுத்தம், அதிகப்படியான கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பு, உடல் பருமன், உடலுழைப்பு இன்மை ஆகியவை இதயம் பழுதுபட காரணமாகலாம். இதயத்திற்கான இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால் மாரடைப்பு ஏற்படுகிறது.

இவை தவிர வயது மூப்பு, பரம்பரை குறைபாடு மற்றும் பிறக்கும் இனம் ஆகியவையும் இதயநோயின் காரணிகளாக அறியப்படுகிறது. சீனர்கள், ஜப்பானியர்களை காட்டிலும் இந்தியர்களுக்கு இதயநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாம்.

நீரிழிவு: சர்க்கரைநோய் இல்லாதவர்களை காட்டிலும் சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதய பாதிப்பு வருவதற்கு மூன்று முதல் ஐந்து மடங்கு வாய்ப்பு அதிகம். நீரிழிவு பாதிப்பு உள்ளோர் கொலஸ்ட்ராலின் அளவினை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்பாட்டில் வைப்பது இதய பாதிப்பு ஏற்படாமல் காப்பதற்கான வழியாகும்.

புகைத்தல்: புகை பிடிக்கும் பழக்கம் உள்ளோருக்கு மற்றவர்களை காட்டிலும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகம். புகை பிடிக்கும் பழக்கத்தினால் அநேகருக்கு இளவயதிலேயே இதய பாதிப்பு ஏற்படுகிறது. புகைக்கும் பழக்கத்தை விட்டுவிடுவது நல்லது.

இரத்தக் கொதிப்பு: அனைவருமே இரத்த அழுத்த அளவினை உரிய இடைவெளியில் பரிசோதித்துக் கொள்வது அவசியம். உயர் இரத்த அழுத்தம் மெல்ல கொல்லும் வியாதியாகும்.

அவ்வப்போது கொலஸ்ட்ராலின் அளவை பரிசோதிப்பதோடு, நன்றாக உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பில் ஈடுபடுவதும், உடல் எடையை சரியான விகிதத்தில் பராமரிப்பதும் இதயத்தை ஆரோக்கியமாக காத்துக் கொள்ளும்.

இதய ஆரோக்கியத்திற்கான உணவு:

புரதம், , நுண்சத்துகள் அடங்கிய இயற்கை உணவுகளை சாப்பிடுதல், கொழுப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் என்னும் சர்க்கரை சார்ந்த உணவுகளை தவிர்த்தல் ஆகியவை இதயத்தை ஆரோக்கியமாக பேணுவதற்கு ஏற்ற வழி.

மாரடைப்பு ஏற்பட்டால் பதற்றத்தில் மருத்துவமனை மாற்றி மருத்துவமனைகளுக்கு அலையாமல், உடனடியாக உரிய மருத்துவ கண்காணிப்பில் சேருவது அவசியம்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?
/body>