உடலுக்கு மிகவும் சத்துத் தரும், உருளை பச்சைப்பயிறு குழம்பு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
உருளை கிழங்கு -2
பச்சைப்பயிறு - 1/4 கப்
தேங்காய்த்துருவல் -1/4 கப்
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
புளிக்கரைசல் -2 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
சீரகம் - 1/4 ஸ்பூன்
மல்லி, கருவேப்பிலை- சிறிது
கடுகு 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில், பச்சைப்பயிறை கழுவி, குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
பின் அதனை அகலமான பாத்திரத்தில் போட்டு உருளை துண்டுகள், சின்ன வெங்காயயத்தை சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.
முக்கால் பதம் வெந்ததும், தேங்காய்த்துருவல், சாம்பார் பொடி, சீரகம் சேர்த்து மிக்ஸியில் விழுதுபோல் அரைத்து அத்துடன் சேர்க்கவும்.
பின் நன்றாக வெந்ததும், புளிக்கரைசலை சேர்த்து ஒரு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், மல்லி, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் போட்டு இறக்கினால் உருளை பச்சைப்பயிறு குழம்பு ரெடி..!