பெங்களூருவை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி அணி!

டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற 46வது ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.

ஷிகர் தவான் 50 ரன்களும் ஸ்ரேயாஸ் அய்யர் 52 ரன்களும் விளாசி அணியை நல்ல ஸ்கோருக்கு உயர்த்தினர்.

பெங்களூரு அணியால் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை கட்டுப்படுத்த முடியவில்லை. அதிகபட்சமாக சாஹல் மட்டும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

பெங்களூரு அணியில் பார்த்திவ் படேல் மட்டுமே அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கோலி, டிவில்லியர்ஸ் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் இன்று விரைவில் அவுட்டாகி பெங்களூரு அணியின் தோல்விக்கு காரணமாக மாறினர்.

இந்த தோல்வி மூலம் வெறும் 8 புள்ளிகளுடன் பெங்களூரு அணி கடைசி இடத்தில் உள்ளது. இனிமேல் பெங்களூரு அணிக்கு பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பு மிகவும் கஷ்டம் தான்.

ஆனால், இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்ந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. மேலும் 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

இன்று நடைபெறும் மற்றொரு போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீசுகிறது. கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. மும்பை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், அதுவும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

Advertisement
More Sports News
dhoni-rishab-pant-comparison-is-a-worst-thing-says-yuvaraj-singh
தோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிடக்கூடாது – யுவராஜ் சிங் நச்!
south-africa-won-the-3rd-t20-match-against-india
பெங்களூரில் டிகாக் தாண்டவம் – சமனில் முடிந்த டி-20 தொடர்!
kohli-beat-rohit-sharma-in-t20-top-scorer
டி-20 கிரிக்கெட்: ரோகித்தை பின்னுக்குத் தள்ளி கோலி முதலிடம்!
vineshphogat-selected-to-play-in-olympics
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ரியல் தங்கல் நாயகி!
ashes-test-cricket-ended-in-tie
ஸ்டீவ் ஸ்மித் உலக சாதனை படைத்தும் டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்!
dhoni-will-continue-as-csk-captain-next-ipl-also
அடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டன்… ஸ்ரீனிவாசன் உறுதி!
stewsmith-breaks-world-record
இன்சமாம் உல் அக்கின் உலகசாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!
india-pakistan-play-davis-cup-tennis-this-year-end
டேவிஸ் கோப்பை: பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா!
fifa-u17-female-worldcup-held-next-year-in-india
இந்த வருஷம் இல்ல அடுத்த வருஷம் தான் ரியல் பிகில் ஆரம்பம்!
david-warner-poor-play-in-ashes-test
இந்தியாவில் அசத்திய வார்னருக்கு இங்கிலாந்தில் இப்படியொரு கதியா?
Tag Clouds