காரசாரமான சில்லி மீன் வறுவல் ரெசிபி

Spicy Chilly Fish Fry Recipe

by Isaivaani, May 18, 2019, 19:54 PM IST

சுவையான மற்றும் காரசாரமான சில்லி மீன் வறுவல் ரெசிபி எப்படி செய்றதுன்ன இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

மீன் - அரை கிலோ

பெரிய வெங்காயம் - 1

சோள மாவு - 2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைப்பழ சாறு - 2 டீஸ்பூன்

பச்சை மளகாய் - 1

பூண்டு - 2

இஞ்சி - ஒரு துண்டு

கறிவேப்பிலை

கொத்தமல்லி இலை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

கிண்ணத்தில் முள் இல்லாத மீன் துண்டுகள், சோள மாவு, மிளகுத் தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், எலுமிச்சைப்பழ சாறு, உப்பு சேர்த் நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், மீன் துண்டுகளை போட்டு இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும்

அதே வாணலியில், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

பச்சை வாசனை போன பிறகு, மீன் துண்டுகளை சேர்த்து உடையாதபடி பிரட்டவும்.

சுவையான சில்லி மீன் வறுவல் ரெடி..!

You'r reading காரசாரமான சில்லி மீன் வறுவல் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை