ஸியோமியின் அடுத்த அதிரடி குறைந்த விலைக்கு 48 எம்.பி. கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Redmi Note 7s Smart phone with 48MP camera will release soon in India

by Mari S, May 21, 2019, 15:32 PM IST

ஸியோமி நிறுவனம் ரெட்மி எனும் ஸ்மார்ட் போன் வகைகளை குறைந்த விலைக்கு விற்பனைக்கு கொண்டு வந்து மற்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய டஃப் கொடுத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது, ரெட்மி நோட் 7எஸ் எனும் புதிய ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 48 எம்.பி. கேமரா திறன் கொண்ட இந்த ஸ்மார்ட் போனின் விலை வெறும் 11 ஆயிரம் ரூபாய் மட்டுமே.

6.3 இன்ச் அகல திரை, கார்னிங் கொரில்லா கிளாஸ்5, ஸ்நாப்டிராகன் 660 பிராசஸர் என பல அதிநவீன வசதிகளை உள்ளடக்கிய இந்த ரெட்மி நோட் 7எஸ், 4000 எம்.ஏ.எச் எனும் பிரம்மாண்ட பேட்டரி கட்டமைப்புடன் வருகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் குயிக் சார்ஜ் 4 இருப்பதால், அதிவிரைவில் சார்ஜ் செய்யமுடியும்.

3ஜி.பி., ரேம் 32 ஜி.பி., இண்டர்னல் மெமரியுடன் உள்ள ஸ்மார்ட்போன் 10,999 ரூபாய்க்கும், 4ஜிபி ரேம் வெர்ஷன் 12,999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. வரும் மே 23ம் தேதி முதல் ஆன்லைனில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளதால், இப்போதிருந்தே ரசிகர்கள் இந்த புதிய ஸ்மார்ட்போனை வாங்க ஆர்வமுடன் உள்ளனர்.

You'r reading ஸியோமியின் அடுத்த அதிரடி குறைந்த விலைக்கு 48 எம்.பி. கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம்! Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை