ஸ்பெஷல் மலபார் மட்டன் பிரியாணி ரெசிபி

Feb 25, 2018, 14:55 PM IST

பிரியாணி பிரியர்களே.. உங்களுக்கான ஸ்பெஷல் மலபார் மட்டன் பிரியாணி ரெசிபி இதோ..

சமைக்க தேவையானவை

 முந்திரிப் பருப்பு - ¼ கப் கறிவேப்பிலை பிரியாணி இலை – 1 உலர்ந்த திராட்சை - ¼ கப் இலவங்கப்பட்டை – 5-6 தக்காளி – 1 ஜாதிக்காய் – 100 கிராம் ஏலம் – 4 பிரியாணி இலை – 1 கிராம்பு – 4 தண்ணீர் -½ லி இலவங்கப்பட்டை – 5 வெங்காயம் - 1 கப் பிரியாணி அரிசி – 250 கி நெய் – 3 கப் பெருஞ்சீரகத்தூள் - ½ தேக்கரண்டி தயிர் - ½ கப் பச்சை மிளகாய் – 5 கொத்தமல்லித் தூள் – 2 தேக்கரண்டி சீரகம் – 1 தேக்கரண்டி

உணவு செய்முறை

முதலில் மட்டனை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதோடு இஞ்சி, கிராம்பு, ஏலம், பெருஞ்சீரகம், கசகசா விழுது, நறுக்கிய இஞ்சி, ஜாதிக்காய், சீரகம், பிரியாணி இலை, புதினா இலை, இலவங்கப்பட்டை, கொத்தமல்லித்தூள், எலுமிச்சைச் சாறு, கறிவேப்பிலை, தயிர் மற்றும் உப்பு நன்கு கலந்து தனியாக வைக்கவும்.

இப்போது ஒரு பாத்திரத்தை எடுத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு வறுத்து எடுக்கவும். அதே மாதிரி நெய்யில் உலர்ந்த திராட்சையையும் வறுத்து எடுக்கவும். அதன் பின்னர் வெங்காயம், உப்பு போட்டு வதக்கி தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும். இப்போது நறுக்கிய வெங்காயத்தை போட்டு கிளறவும். அத்தோடு தக்காளியையும் போட்டு நன்கு வதக்கவும்

இப்போது ஊற வைத்த மட்டனை அத்தோடு சேர்க்கவும். போதுமான அளவு நீர் ஊற்றி நன்கு கலக்கவும். பாத்திரத்தை மூடி வைத்து வேக வைக்கவும். மற்றொரு பாத்திரத்தை எடுத்து நான்கு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதனுள் கிராம்பு, பெருஞ்சீரகம், ஏலம், சீரகத்தூள் மற்றும் கறிவேப்பிலை போடவும். பின்னர் இலவங்கப்பட்டை மற்றும் வெங்காயம் போட்டு நன்கு கிளறவும்.

அதோடு சாதத்தை சேர்த்து திரும்பவும் நன்கு கிளறவும். தேவையான அதாவது அரிசி அளவு நீர் மூழ்கும் அளவு நீர் ஊற்றவும். பின்னர் உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடி அடுப்பில் வைத்து வேக விடவும். மட்டன் வெந்ததும் பாத்திரத்தின் மூடியை திறந்து மறுபடியுமாக சிறிது கிளற வேண்டும்.

சாதம் செய்த பாத்திரத்திலிருந்து ஒரு பகுதி சாதத்தை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். சில துண்டு மட்டனை எடுத்து மீதம் இருக்கும் சாதத்தின் மீது வைக்கவும் இப்போது தனியாக எடுத்து வைத்த சாதத்தை மட்டன் மீது பரப்பவும். திரும்பவும் மட்டன் எடுத்து வைத்த சாதத்தை மட்டன் மீது பரப்பவும்.

திரும்பவும் மட்டன் துண்டுகள் பரப்பி அதன் மீது சாதத்தை பரப்பவும். இப்படியாக மொத்த சாதமும் மட்டனும் சமமாக அடுக்குகளாக பரப்பப்பட்ட பின்னர் இறுதியாக வறுத்த முந்திரி பருப்பு, திராட்சை வெங்காயத்தை சேர்க்கவும். சிறிது கொத்தமல்லி இலை தூவி சிறிது அடுப்பில் வைத்து வேக விடவும். இப்போது ருசியான கமகமக்கும் கேரள மலபார் பகுதி பிரசித்திப்பெற்ற பிரியாணி தயார்.

You'r reading ஸ்பெஷல் மலபார் மட்டன் பிரியாணி ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை