என்னது..? மதுபானங்கள் டோர் டெலிவரியா.. ஹிப்பார் செயலியுடன் டாஸ்மாக் கைகோர்ப்பு..

பெங்களூருவை தொடர்ந்து, தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் விற்பனை செய்து, அதனை டோர் டெலிவரி செய்யும் டாஸ்மாக் ஹிப்பார் செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் உடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் விற்கப்படுகிறது. தேர்ந்தெடுத்துவிட்டு பணம் செலுத்தினால் போதும் பொருள் உங்கள் வீடு தேடி வந்துவிடும். இந்த ஆன்லைன் முறை, தற்போது மதுபானங்கள் விற்பனைக்கும் வசதியை ஏற்படுத்தி உள்ளது.

ஆம், ஹிப்பர் என்ற செயலி மூலம் மதுபானங்கள் தேர்வு செய்து ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம். நாம் இருக்கும் இடத்திற்கே நம்மை தேடி வந்து டெலிவரி செய்யும் வசதியும் உள்ளது. இந்த வசதி தற்போது இந்தியாவில் பெங்களூர் நகரில் மட்டும் செயல்பாட்டில் உள்ளது.

இந்த வசதி தற்போது தமிழகத்திலும் அறிமுகமாக உள்ளது. இந்த ஹிப்பர் செயலியுடன் தமிழக டாஸ்மாக் கைகோர்த்துள்ளது. இதனால், விருப்பப்பட்ட மதுபானத்தை எளிதாக கிடைக்கும் கடைகளில் வாங்க வசதியாக இருக்கும்.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மதுபானம் வாங்கும்போது ஹிப்பர் செயலியுடன் பணம் செலுத்தலாம். செயலியில் மது வகைகள், விலை உள்ளிட்டவையின விவரங்கள் இருக்கும். சென்னையில் உள்ள 6 நவீன கடைகளில் மட்டும் தற்போதைக்கு இந்த வசதி உள்ளது. அதனால், விருப்பமான மதுபானத்தை தேர்வு செய்து பணம் செலுத்தினால் போதும். வீட்டிற்க டோர் டெலிவரி செய்யப்படும். இந்த வசதியை விரிவுப்படுத்தும் முயற்சியும் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!

READ MORE ABOUT :