செம்பு பாத்திரத்தில் நீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்

by Logeswari, Sep 7, 2020, 17:50 PM IST

எதிர்காலத்தில் பலியாகும் உயிர்களுக்கு நீரிழிவு நோய் தான் முக்கிய காரணமாக விளங்கும் என்று நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.செம்பு பாத்திரத்தில் நீரை சேமித்து குடிப்பது பாரம்பரியத்தில் ஒன்றாகும்.செம்பு தண்ணீர் குடிப்பதால் அதிக பலன்களை தருகின்றது.செம்பு பாத்திரத்தில் இரவு முழுவதும் அல்லது நான்கு மணி நேரம் மட்டுமாவது நீரை சேமித்து பருகவேண்டும்.இது போல செய்து வந்தால் உடலுக்கு அதிகமான சத்துக்கள் கிடைக்கும்.

நீரிழிவு நோய்:-

மனிதனின் அடிப்படையான ஆரோக்கியத்திற்கு செம்பில் இருந்து கிடைக்கும் சத்துக்கள் தேவையானது.அதனால் தான் நாம் உணவு உண்ணும் போது தண்ணீர் மூலமாக எடுத்து கொள்கிறோம்.செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை சீர் செய்து நீரிழிவு நோயை கட்டுபடுத்துகிறது.

செரிமானம்:-

நாம் அசைவ உணவை உண்ட பிறகு செரிமானத்துக்கு நடப்பது,உடற்பயிற்சி போன்றவற்றை செய்து கொண்டு இருப்போம்.ஆனால் செம்பு நீரை குடித்தால் மட்டும் போதும் செரிமானம் தானே செய்து கொள்ளும்..இரவு முழுவதும் செம்பு பாத்திரத்தில் தண்ணீரை சேமித்து மறுநாள் காலையில் குடித்தால் நீரிழிவு நோயிக்கு ஒரு நல்ல மருந்து ஆகும்.

செம்பு நீரின் முக்கியத்துவம் அறிந்து கொண்டு தினமும் செம்பு பாத்திரத்தில் நீரை குடித்து வாருங்கள்...ஆரோக்கியமான உடலை பெறுங்கள்...


More Health News