ரியல்மீ நிறுவனத்தின் நார்ஸோ வரிசை ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நார்ஸோ 20, நார்ஸோ 20ஏ மற்றும் நார்ஸோ 20 ப்ரோ ஆகியவை விற்பனையாகும் நாள்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.முதலாவதாக ரியல்மீ நார்ஸோ 20 ப்ரோ செப்டம்பர் 25ம் தேதி (வெள்ளிக்கிழமை) நண்பகல் 12 மணிக்கு ஃபிளிப்கார்ட், ரியல்மீ இணையதளங்களிலும் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்.
ரியல்மீ நார்ஸோ 20 ப்ரோ சிறப்பம்சங்கள்
சிம் எண்ணிக்கை : இரண்டு (நானோ)
தொடுதிரை : 6.5 அங்குலம் எஃப்எச்டி; 1080X2400 தரம்; 20:9 விகிதாச்சாரம்
உச்சபட்ச ஒளிரும் தன்மை: 480 என்டிஎஸ் பிரைட்னஸ்
முன்புற காமிரா : 16 எம்பி ஆற்றல் (எஃப்/2.1 லென்ஸ்)
(முன்புற காமிரா செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பியூட்டி, ஃப்ராண்ட் பனோரமா, ஃப்ளிப் செல்ஃபி, நைட்ஸ்கேப் உள்ளிட்ட திறன்கள் கொண்டது)
பின்புற காமிரா : 48 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ஆற்றல் கொண்ட குவாட் வகை
இயக்கவேகம் : 6 ஜிபி மற்றும் 8 ஜிபி
சேமிப்பளவு : 64 ஜிபி மற்றும் 128 ஜிபி (256 ஜிபி வரை கூட்டும் வசதி)
பிராசஸர் : ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10
மின்கலம் : 4500 mAh
எடை : 191 கிராம்
6ஜிபி + 64 ஜிபி ரூ.14,999/- விலையிலும் 8 ஜிபி + 128 ஜிபி ரூ.16,999/- விலையிலும் கிடைக்கும்.