போகோ சி3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றிய யூகங்கள் வெளிவந்தபடி உள்ளன. ரெட்மி 9சி ஸ்மார்ட்போனை ஒத்த அம்சங்கள் இதில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ரெட்மி 9சி போனை போல பின்புறம் மூன்று காமிராக்கள் போகோ சி3 ஸ்மார்ட்போனில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போகோ சி3 யூகிக்கப்படும் சிறப்பம்சங்கள்:
சிம் : இரட்டை சிம்
தொடுதிரை: 6.53 அங்குலம் எச்.டி+ 720X1600 பிக்ஸல் தரம்; எல்சிடி டாட் டிராப் திரை; விகிதாச்சாரம் 20:9
முன்புற காமிரா: 5 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 13 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ஆற்றல் கொண்ட மூன்று காமிராக்கள் (உறுதியான தகவல் கிடைக்கப்பெறவில்லை)
இயக்கவேகம்: 4 ஜிபி
சேமிப்பளவு: 64 ஜிபி (512 ஜிபி வரை உயர்த்திக்கொள்ளலாம்)
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10; MIUI 12
மின்கலம் (பேட்டரி) : 5000 mAh
4ஜி எல்டிஇ, வைஃபை, மைக்ரோ-யூஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், பின்புறம் விரல்ரேகை உணரி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) முககடவுச்சொல்
பரிமாணம்: 164.9X77.07X9 மிமீ
எடை: 196 கிராம்
அக்டோபர் 6ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனை ஆரம்பமாகும். இதன் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லையென்றாலும் ரூ.10,990/- ஆக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.