சாப்பிடத்தூண்டும் பீட்ரூட் கட்லெட்..

Advertisement

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்து சாப்பிடும் பீட்ரூட் கட்லெட் எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..

சமைக்க தேவையானவை

 பீட்ரூட் - 2 வாழைக்காய் - ஒன்று வெங்காயம் - ஒன்று தனியா தூள் - கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி ஆம்சூர் பொடி - கால் தேக்கரண்டி ப்ரெட் க்ரம்ப்ஸ் - அரை கப் மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி சீரக தூள் - கால் தேக்கரண்டி கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி இஞ்சி - ஒரு தேக்கரண்டி பூண்டு - 6 பல் கொத்தமல்லி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு

உணவு செய்முறை

முதலில் வாழைக்காயை தோலுடன் வேக வைத்து எடுக்கவும். முக்கால் வேக்காடாக இருந்தால் போதுமானது. ரொம்பவும் குழைவாக வேக வைக்க வேண்டாம். ஆறியபின் தோலுரித்து உதிர்த்து வைக்கவும். பீட்ரூட்டை துருவி வைக்கவும்

இஞ்சி பூண்டை நசுக்கி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி பூண்டு சேர்த்து சிவக்க வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

இப்பொழுது துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். இரண்டு நிமிடம் வதக்கிய பின்னர் எல்லா தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். ஐந்து நிமிடம் வதக்கி, வேக வைத்து உதிர்த்த காயை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

ஆறியபின் அதனுடன் ப்ரெட் க்ரம்ப்ஸ், கொத்தமல்லி சேர்த்து நன்றாக பிசைந்து தேவையான வடிவத்தில் தட்டி வைக்கவும். ஒரு பேனில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கட்லெட்டை வைத்து மூன்று நிமிடம் ஒவ்வொரு பக்கமும் மிதமான தீயில் வேக விடவும். திருப்பி போடும் போது ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். எண்ணெயை பரவலாக அதன் மேல் ஊற்றவும். சுவையான பீட்ரூட் கட்லெட் தயார்.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>