ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு - அம்பேத்கர் பற்றி மோசமாக சித்தரிப்பு

இந்தியாவில் இடஒதுக்கீடு என்ற வியாதியை பரப்பியவர் டாக்டர் அம்பேத்கர் என கிரிட்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Mar 22, 2018, 13:52 PM IST

இந்தியாவில் இடஒதுக்கீடு என்ற வியாதியை பரப்பியவர் டாக்டர் அம்பேத்கர் என கிரிட்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி ஹர்திக் பாண்டியா அவரது ட்விட்டர் பக்கத்தில், “எந்த அம்பேத்கர்? சட்டத்தையும், அரசியலையும் வகுத்தவரா…? அல்லது இடஒதுக்கீடு என்னும் நோயை இந்த நாட்டில் பரப்பியவரா? என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து பாண்ட்யா அந்த பதிவை அவரது பக்கத்தில் இருந்து நீக்கினார்.

இதையடுத்து டி.ஆர். மேவால் என்பவர் தனது புகாரில், “ஹர்திக் பாண்டியாவின் ட்வீட் மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதோடு, ஒரு சார்ப்பு நிலையில் வெறுப்பை உருவாக்குவதாகவும் இருக்கிறது. மேலும் இந்திய அரசியலமைப்பை புறக்கணிப்பதாகவும், அரசியலமைப்பை வடித்தவரை திட்டமிட்டே அவமதித்து உள்ளதாகவும் உள்ளது. எனவே பாண்ட்யா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இது குறித்து ஜோத்பூர் எஸ்.சி. / எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இம்மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த ஜோத்பூர் மாவட்ட நீதிமன்றம் ஹர்திக் பாண்டியா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு - அம்பேத்கர் பற்றி மோசமாக சித்தரிப்பு Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை