கொய்யா இலையில் நமக்கு தெரியாமல் பல உண்மைகள் மறைந்துள்ளது.கொய்யா பழம் சாப்பிடும் அளவிற்கு கூட நாம் கொய்யா இலையை சீண்டுவதில்லை. உண்மையில் சொல்ல போனால் பழத்தை விட கொய்யா இலையில் தான் அளவு கடந்த ஆரோக்கிய குணங்கள் உள்ளது. இந்த இலை சர்க்கரை நோய்க்கு அசத்தலான தடுப்பு மருந்தாகவும் செயல்படுகிறது. ஆனால் சில வதந்திகளால் கொய்யா பழம் மற்றும் இலையை சாப்பிட அஞ்சுகிறோம்.. கொய்யா இலையில் முழுக்க முழுக்க ஆரோக்கிய குணம் தான் இருக்கிறது. கொய்யா இலையை எப்படி பயன்படுத்துவது குறித்தும் டீ செய்வது குறித்தும் பின்வருமாறு காணலாம்..
தேவையான பொருள்கள்:-
கொய்யா இலை பொடி-2 ஸ்பூன்
தேன்-தேவையான அளவு
எலுமிச்சை சாறு-2 ஸ்பூன்
இஞ்சி -தேவையான அளவு
செய்முறை:-
முதலில் மரத்தில் இருந்து பிரஷ்ஷான கொய்யா இலையை பறித்து வெயிலில் நன்றாக காய வைக்கவும்.இலைகள் நன்கு வெயிலில் சுருண்டவுடன் மிக்சியில் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தேவையான அளவு நீர் ஊற்றி அதில் அரைத்த கொய்யா இலை பொடி,எலுமிச்சை சாறு,இஞ்சி ஆகியவை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாக 15 நிமிடம் கொதித்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.பிறகு டீயை வடிகட்டி இனிப்பிற்கு தேனை சேர்த்தால் கொய்யா டீ தயார்..
குறிப்பு :- இதனை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தவறாக குடித்து வந்தால் உடல் எடை குறையும்.சர்க்கரை நோயில் அவதிப்படுபவர்கள் இதனை குடித்தால் சர்க்கரையின் அளவை சீர் செய்து நீரிழிவு நோயை தடுக்கும்..