டிமென்சியா, பார்க்கின்சன்ஸ் குறைபாடுகளை தடுக்கும் நாட்டு மருந்து எது தெரியுமா?

Advertisement

இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் மட்டுமல்ல, ஈரான் நாட்டு பாரம்பரிய மருத்துவத்தில் பெயர் பெற்றது கடுக்காயாகும். கடுக்காய், குளிர்ச்சி மற்றும் வறண்ட தன்மை கொண்டதாக அறியப்படுகிறது. காயாக இருக்கும்போது பறிக்கப்பட்டால் கடுக்காய் கறுப்பாக காணப்படுகிறது. பழுத்தால் மஞ்சள் நிறமாக மாறுகிறது. அது உலரும்போது மஞ்சள் கடுக்காய் என்று அழைக்கப்படுகிறது. பழுக்கும்போது அதிலுள்ள 'டானின்' என்ற பொருளின் அளவு அதிகமாகிறது.

கடுக்காயில் அடங்கியுள்ளவை
காலிக் அமிலம், எல்லாஜிக் அமிலம், கெபுலிக் அமிலம், கெபுலினிக் அமிலம் மற்றும் டானிக் அமிலம் ஆகியவை 32 முதல் 45 சதவீதம் உள்ளது. குவார்சிட்டின், கேடேசின் மற்றும் கெம்ஃப்ரால் போன்ற ஃப்ளவனாய்டுகளும் இதில் உள்ளன. ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள்), வைட்டமின் சி ஆகியவையும் கடுக்காயில் காணப்படுகின்றன.

பொது மருத்துவ பயன்கள்
கடுக்காய், இரத்தக்கசிவை நிறுத்தி காயத்தை ஆற்றக்கூடியதாக கருதப்படுகிறது. மனக்குழப்பம், தலைவலி, தனிமையுணர்ச்சி, மனஅழுத்தம், மறதி, முகவாதம், மயக்கம், தூக்கமின்மை போன்றவற்றை குணப்படுத்தவும் இது பயன்படுகிறது.

கண்கள்
கண்களிலுள்ள அதிகப்படியான ஈரத்தை போக்குவதற்கு கடுக்காய் பயன்படுகிறது. கண்களில் நீர் வழிதல், கண் உறுத்தல் ஆகியவற்றை போக்குவதற்கு கடுக்காயை பன்னீரில் ஊற வைத்து பயன்படுத்தலாம்.

இதய படபடப்பு
கடுக்காய் இதயத்திற்கு புத்துணர்வு அளிக்கிறது. இதய படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்புக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் கடுக்காய் பயன்படுத்தப்படுகிறது.

வயிறு
கடுக்காயை கொண்டு தயாரிக்கப்படும் டானிக், வயிற்றுக்கோளாறுகளை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. வயிற்றிலுள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை குறைப்பதன் மூலம் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகிய நோய்களை குணமாக்குகிறது. பசியை தூண்டுகிறது. செரிமானம், கழிவுகளை வெளியேற்றுதல் ஆகியவற்றுக்கும் கடுக்காய் பயன்படுகிறது.

சிறுநீரகம்
சிறுநீரை வெளியேற்றுவதற்கும், மண்ணீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி ஆகியவற்றை குணப்படுத்த கடுக்காய் பயன்படுகிறது.

சருமம்
சருமத்திற்கு நிறம் அளித்தல், முடி நரைப்பதை தடுத்தல் ஆகிய இயல்புகளும் கடுக்காய்க்கு உள்ளன. தொழுநோய் சிகிச்சையிலும் கடுக்காய் பயன்படுகிறது. ஈறுகளில் இரத்தக்கசிவை கடுக்காய் நிறுத்துகிறது. மூளையின் செல்களில் பாதிப்பு ஏற்படுவதால் உண்டாகும் பிரமையினால் உண்டாகும் பயம் (டிமென்சியா), உடல் நடுக்கம் (பார்கின்சன்ஸ்) போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் கடுக்காய் தடுக்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :

/body>