இந்தியாவில் ஸ்மார்ட் சாதனங்களின் சந்தை விரிந்து வரும் நிலையில் அமெரிக்க நிறுவனமான கார்மின் வேனு எஸ்க்யூ மற்றும் வேனு எஸ்க்யூ மியூசிக் ஆகிய இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது.
வேனு (Venu) ஸ்மார்ட்வாட்ச்களின் பொதுவான சிறப்பம்சங்கள்:
1.3 அங்குலம் எல்சிடி வண்ண தொடுதிரை, ஆறு நாள்களுக்கு தாங்கும் மின்கலம், ஜிபிஎஸ் வசதியுடன் 14 மணி நேரம் இயங்கக்கூடியது. வேனு எஸ்க்யூ மியூசிக் வாட்சி 37.6 கிராம் எடை கொண்டது. கொரில்லா கிளாஸ் 3 அடுக்கு மற்றும் 240 X 240 பிக்ஸல் தரம் கொண்டது.இந்த வாட்ச்சை புளூடூத் பயன்படுத்தி ஸ்மார்ட்போனுடன் இணைக்கலாம். ஆகவே, வரும் குறுஞ்செய்திகளை நேரடியாக திரையில் வாசிக்க முடியும். 'ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே' வசதி கொண்டது.
'கனெக்ட்ஐக்யூ' வசதி இருப்பதால் பல கடிகார முகங்களைத் தரவிறக்கம் செய்து கொண்டு விருப்பம்போல் மாற்றிக்கொள்ள முடியும். 'ஃபேஸ் இட்' வசதி இருப்பதால் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுத்து அதை தங்கள் தனிப்பட்ட கடிகார முகத்திற்கு பயன்படுத்த முடியும்.இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை கண்டுபிடிக்குமளவுக்கு எஸ்பிஓ2 வசதி இருப்பதுகார்மின் வேனு எஸ்க்யூ வாட்ச்களின் சிறப்பம்சமாகும். உறக்கம், சுவாச அளவு, அசாதாரண இதயத் துடிப்புக்கான எச்சரிக்கை, மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு, மன அழுத்த கண்காணிப்பு உள்ளிட்ட பல ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள் இவற்றில் உள்ளன.
நீருக்குள் 50 மீட்டர் ஆழத்தில் 10 நிமிடங்கள் இருந்தாலும் பாதிப்பு ஏற்படாதவண்ணம் பாதுகாப்பு ஏற்பாடு கொண்டது.வேனு எஸ்க்யூ மியூசிக் வாட்சில் ஸ்போடிஃபை, அமேசான் மியூசிக் போன்ற மூன்றாம் நபர் இசை சேவைகளிலிருந்து பாடல்களை எளிதாக தரவிறக்கம் செய்ய முடியும்.வேனு எஸ்க்யூ ஸ்மார்ட்வாட்ச்சின் விலை ரூ.21,090/- ஆகும். வேனு எஸ்க்யூ மியூசிக் ஸ்மார்ட்வாட்ச்சின் விலை ரூ.26,290/- ஆகும்.