மார்பக புற்றை தடுப்பது... கருத்தரிக்க உதவுவது... பெண்களுக்கு ஏற்ற காய்கறிகள் எவை?

Advertisement

மார்பக புற்றை தடுக்கும் பீன்ஸ்
பீன்ஸ் வகையைச் சேர்ந்த காய்கள் அனைத்தும் கொழுப்புச் சத்து குறைந்தவை. அவற்றில் புரதம் (புரோட்டீன்) மற்றும் நார்ச்சத்து மிகவும் அதிகம். இவை பெண்களின் ஹார்மோன்களின் நிலைப்படுத்தும் இயல்பு கொண்டவை. மார்பக புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படுவதை தடுக்கும் குணம் பீன்ஸ்வகை காய்களுக்கு உள்ளது. ஆகவே, பீன்ஸை பெண்கள் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

இளமைதோற்றத்தை அளிக்கும் தக்காளி
தக்காளியில் லைகோபேன் என்ற ஆன்ட்டிஆக்ஸின் (ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்) உள்ளது. இது பெண்களை மார்பக புற்றுநோய் ஏற்படுவதிலிருந்து காப்பாற்றுகிறது. இதயத்திற்கும் ஆரோக்கியம் அளிக்கிறது. சூரிய கதிர்களிலிருந்து வரும் புற ஊதா கதிர்களின் பாதிப்பிலிருந்து சருமத்தை காத்து இளமையான தோற்றத்தை அளிக்கிறது.

கருத்தரிக்க உதவும் காளான்
சினைப்பையிலுள்ள கட்டிகளால் பல பெண்களுக்கு கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும். இந்தக் குறைபாட்டை மேற்கொண்டு கருத்தரிக்க காளான்கள் உதவுகின்றன. ஆகவே, காளான்களும் பெண்களுக்கு ஏற்றவையாகும்.

இரத்தப் புற்றை தடுக்கும் பிரெக்கொலி
பிரெக்கொலி மற்றும் அதே வகையை சேர்ந்த தாவரங்களில் சல்ஃபோரபேன் என்ற பொருள் உள்ளது. இது லூகேமியா போன்ற இரத்த புற்றுநோயை உருவாக்கும் செல்களை தாமாக அழிய செய்கிறது.

இரத்தக் கொதிப்பை குறைக்கும் பீட்ரூட்
ஒரு தம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் இரத்த அழுத்தம் உடனடியாக குறையும். 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு இதைக் கூறுகிறது. ஆகவே, இரத்தக் கொதிப்பை கட்டுக்குள் வைக்கவிரும்புவோர் பீட்ரூட் ஜூஸ் பருகலாம்.

சிறுநீர்ப் பாதை தொற்றை போக்கும் சர்க்கரை வள்ளி
பெண்களை அதிக அளவில் பாதிப்பது சிறுநீர்ப்பாதை தொற்றாகும். சர்க்கரை வள்ளிக் கிழங்கில் கார்போஹைடிரேடுகள் உள்ளன. அவற்றில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. இது கண்களின் ஆரோக்கியத்தை காப்பதோடு, சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் தொற்றையும் குணப்படுத்துகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :

/body>