வெயிட் லாஸ், ஃபேட் லாஸ் இரண்டு பதங்களும் பொதுவாக ஒன்றுபோல் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் உண்மையில் இரண்டுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. வெயிட் லாஸ் எனப்படும் எடை குறைப்பு, கொழுப்பு, தசைகள் மற்றும் நீர் இவை அனைத்தும் சேர்ந்த ஒட்டுமொத்த உடல் எடை குறைப்பை குறிக்கிறது. மாறாக, ஃபேட் லாஸ் என்பது உடலிலிருந்து கொழுப்பை மட்டும் இழப்பதைக் குறிக்கும். ஃபேட் லாஸ் என்பது வெயிட் லாஸ் என்பதைக் காட்டிலும் சிறந்ததாகும்.
ஃபேட் லாஸ் - வெயிட் லாஸ்: வேறுபாடு என்ன?
எடை குறைப்பை கணக்கிடுவது மிகவும் எளிதானதாகும். எடை இயந்திரம் (weight scale)ஒன்றின்மீது ஏறி நின்றால் எடையை கணக்கிட்டுவிடலாம். பொதுவாக காணப்படும் எடை இயந்திரங்கள் ஒட்டுமொத்த உடல் எடையில் ஏற்படும் மாறுபாட்டை மட்டுமே காண்பிக்கும். உடலிலிருந்து இழக்கப்பட்ட கொழுப்பின் சதவீதத்தை கண்டுபிடிக்க, உடல் கொழுப்பை கணக்கிடும் இயந்திரத்தை (body fat scale) பயன்படுத்தலாம். குறைந்த கொழுப்பின் அளவை துல்லியமாக அளவிடுவது கடினம். ஆனால், ஃபேட் ஸ்கேல் இயந்திரம் ஓரளவுக்கு கொழுப்பின் அளவை காண்பிக்கும்.
ஃபேட் லாஸ் - ஏன் சிறந்தது?
எடையை குறைப்பதற்காக பரிந்துரைக்கப்படும் உணவு பழக்கம் பொதுவாக ஒட்டுமொத்த எடையை குறைக்கவே பயன்படுகிறது. அந்த உணவு பழக்கத்தை கைக்கொள்ளுவதால் தசை மற்றும் நீரின் எடையும் குறைகிறது. பெரிய அளவிலான ஆரோக்கிய குறைபாடுகளுக்கு கொழுப்பே காரணமாகிறது. ஆனால், உடல் தசைகளின் நிறையை இழப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். தசைகளை ஆரோக்கியமாக காப்பது, நல்ல தோற்றத்தை அளிப்பதோடு, தீவிர நோய்கள் ஏற்படும் ஆபத்திலிருந்தும் காப்பாற்றுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் இது உதவுகிறது. உடலின் வளர்சிதை (metabolism)மாற்றத்தை தூண்டவும் இது உதவும். ஆனால், தசையின் நிறையை குறைத்தால், உடல் எரிசக்தியை (கலோரி) பயன்படுத்தும் ஆற்றலை இழக்கிறது. இது, உடலில் கொழுப்பு அதிகரித்து எடையை கூடச் செய்யக்கூடும்.
கொழுப்பை எப்படி கரைப்பது?
கொழுப்பு, உடல் நலத்திற்கு தீங்கானது. உடல் எடையை குறைத்தோமானால் உடலில் கொழுப்புக்குப் பதிலாக, தசையின் நிறை நிரப்பப்படும். இது உடல் தோற்றத்தையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஆகவே, நம் கவனம் எடையை குறைப்பதில் அல்ல; கொழுப்பை குறைப்பதில் இருக்கவேண்டும். அதிக புரதம்: புரதம், நம் உடலை கட்டமைப்பதாகும். நம் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் புரதத்தால் (புரோட்டீன்) ஆனது. ஆகவே, உணவில் கார்போஹைடிரேடு மற்றும் கொழுப்பை குறைக்கும்போது, அதற்கு மாற்றாக அதிக புரதத்தை சாப்பிடவேண்டும்.
ஸ்ட்ரென்த் டிரைனிங்: ஸ்ட்ரென்த் டிரைனிங் பயிற்சி, அதிக கொழுப்பு மற்றும் தசையின் நிறையை குறைக்க உதவும். இதைச் செய்வதால் தோற்றம் மெலியும். கலோரி: எடையை குறைக்க விரும்பும் அநேகர், கட்டுப்பாடான உணவு பழக்கத்தை கடைபிடித்து, அதிக கலோரிகளை குறைத்துவிடுகின்றனர். இந்த திடீர் மாற்றம் நம் உடலுக்கு ஏற்றதாக அமையாது. தசையின் நிறை குறைவதால், உடலின் எடை வேகமாக குறைந்துபோகும். ஆகவே, கொழுப்பை மட்டும் குறைக்கக்கூடிய உணவு பழக்கத்தை கடைபிடிக்கவேண்டும்.