ரெட்மி 9ஐ, இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5, ரியல்மீ சி15 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக விளங்கக்கூடிய ஸ்மார்ட்போனை மோட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 5000 mAh ஆற்றல் கொண்ட மின்கலமுள்ள இந்த மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போனுக்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் 2 நாள்களுக்கு நிற்கும் என்று கூறப்படுகிறது. போர்ட்ரைட் மோடு, பனோரமா, ஃபேஸ்பியூட்டி, மாக்ரோ வெர்ஷன், மேனுவல் மோடு மற்றும் கூகுள் லென்ஸ் இன்டெக்ரேஷன் போன்ற வசதிகளுடன் வரும் மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் பிப்ரவரி 26ம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஃபிளிப்கார்ட் தளத்திலும் முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களிலும் விற்பனைக்கு வரும்.
மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
சிம் : இரட்டை நானோ சிம்
தொடுதிரை : 6.5 அங்குலம் எச்டி+ (720X1600 பிக்ஸல்), மாக்ஸ் விஷன் டிஸ்ப்ளே
இயக்கவேகம் : 2 ஜிபி மற்றும் 4 ஜிபி
சேமிப்பளவு : 32 ஜிபி மற்றும் 64 ஜிபி (மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1 டிபி வரை உயர்த்தலாம்)
முன்புற காமிரா: 5 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 13 எம்பி + 2 எம்பி (டூயல் ரியர் காமிரா)
பிராசஸர் : மீடியாடெக் ஹீலியோ ஜி25 SoC
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10
மின்கலம் : 5000 mAh
சார்ஜிங் : 10W
4ஜி VoLTE, வைஃபை 802.11 b/g/n, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ வசதிகள் கொண்டது மோட்டோ இ7 பவர்.
2 ஜிபி + 32 ஜிபி போன் ரூ.7,499/- விலையிலும் 4 ஜிபி + 64 ஜிபி போன் ரூ.8,299/- விலையிலும் கிடைக்கும்.