ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி ரெசிபி..

Jun 16, 2018, 16:34 PM IST

உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் ரம்ஜான் தின வாஸ்த்துக்கள். இன்னைக்கு நாம ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி எப்படி செய்றதுன்னு .பார்ப்போம்..

தேவையான பொருள்கள்:

மட்டன் - 1 கிலோ
பாஸ்மதி அரிசி- 1 கி
வெங்காயம் - 1/2 கி
இஞ்சி 50 கிராம்
நெய் - 5 டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
முந்திரி - 100 கிராம்
உலர் திராட்சை -
100கிராம்
பூண்டு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 100 கிராம்
மஞ்சள்தூள் -1டீஸ்பூன்
தக்காளி - 300கிராம்
கசகசா - 2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/2 கப்
தயிர்-தேவையான அளவு
மிளகாய்த்தூள்-
சிறிதளவு
கரம் மசாலா தூள் - 1
1/2 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் -1 
புதினா- சிறிதளவு
கறிவேப்பிலை- சிறிதளவு
எண்ணெய், உப்பு- தேவையான அளவு

செய்முறை:

மட்டனை நன்றாக கழுவி பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை
நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும்.

தேங்காய் துருவலுடன் கசகசாவை சேர்த்து அரைக்கவும். தக்காளி,புதினா,  கறிவேப்பிலையையும் நறுக்கவும்.

குக்கரில் எண்ணையை ஊற்றி காய்ந்ததும், முக்கால் பங்கு வெங்காயத்தை போட்டு
நன்றாக வதக்கவும். இஞ்சி,பூண்டு, பச்சை மிளகாய் விழுதை சேர்த்து 3 நிமிடம்
வதக்கவும்.

கறிவேப்பிலைத் தூள்,மிளகாய் தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா தூளையும் போடவும். அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கி மட்டனை சேர்க்கவும்.

அதன் பின் நன்றாக வதக்கி தயிரை ஊற்றி உப்பு போடவும். குக்கரை மூடி சுமார் 15 நிமிடம் வேக வைக்கவும். சிறிது நேரம் கழித்து திறந்து கசகசா, தேங்காய் கலவையை
போடவும்.

அரிசியை கழுவி தண்ணீரை வடிகட்டி பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி அதில் அரிசியைப்
போட்டு லேசாக கிளறிய பின் உப்பு போட்டு 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து அரிசியை வேகவிடவும். அரிசி வெந்ததும் இறக்கவும்.

மீதமுள்ள வெங்காயம், திராட்சையை நெய்யில் வதக்கவும். முந்திரியை
பொன்னிறமாக வறுக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் வேகவைத்த சாதத்தை சிறிதளவு கொட்டி அதனுடன் சிறிதளவு கறிவேப்பிலை, புதினா, வதக்கிய வெங்காயம், முந்திரி, திராட்சையை பரவலாகக் கொட்டவும். எலுமிச்சை சாற்றை பிழிந்து விடவும். மட்டனை மேலாக பரபலாக இடவும்.

இதைப்போல ஒன்றன்மீது ஒன்றாக 3 அடுக்குகளாக அடுக்கவும். பிறகு அதை ‘தம்’ கட்டி 10 நிமிடம் வைக்கவும். சூடான சுவையான மட்டன் பிரியாணி ரெடி.

You'r reading ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி ரெசிபி.. Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை