புது வாட்சப் குரூப்பா? குருப் அட்மின் உஷார்..!

பட்டி தொட்டிலிருந்து வாட்சப் உபயோகிக்காதவர்களைப் பார்க்க முடியாது. பொழுதுபோக்குக்காக வாட்சப் உபயோகித்து இப்பொழுது இடைவெளியின்றி வாட்சப் உபயோகிக்கும் மோகம் அனைவரிடமும் வந்துவிட்டது. வாட்சப் மூலமாக தொடர்ந்து குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. குறிப்பாக பல ஊர்களில் பொய்யாக பரப்பப்பட்ட வாட்சப் வதந்திகளால் பலருடைய உயிர் பறி போனது நம் அறிந்ததே. செய்தித்தாள்களை காட்டிலும் காட்டுத்தீப் போல செய்திகள் உடனுக்குடன் பரப்பப்படும் நிலையினால், நன்மையும், தீமையும் விரைவாக நடக்கிறது.

இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வாட்சப் நிறுவனம் ஏதேனும் மாற்று வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள், விதிகள் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசும், உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களும் பல முறை ஆணை பிறப்பித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து வாட்சப் நிறுவனமும் சில மாற்றங்களை கொண்டு வந்தது. ஒருவர் தனக்குப் பிடிக்காத வாட்சப் குரூப்பில் இருந்து வெளியேறிக் கொள்ளலாம் என்றும் அப்படி வெளியேறினால் அந்தக் குரூப்பின் அட்மினால் கூட மீண்டும் உங்களை அந்த குரூப்பிற்குள் இணைத்து தொந்தரவு செய்ய முடியாது என்றும் கட்டுப்பாடுகள் சமீபத்தில் விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிக நபர்களால் பகிரப்படும் வாட்சப் பார்வட் செய்திகளை “Forwarded” என்று குறிப்பிட்டு காட்டும் வகையில் தற்போது வாட்சப் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்படி ஒரு பக்கம் வாட்சப் விவகாரம் இருக்க, காஷ்மீர் மாநில அரசு ஒரு கட்டம் முன்னேறி உள்ளது. அந்த மாநிலத்தில் இனி யாராவது புதிதாக வாட்சப் குரூப் தொடங்க வேண்டுமென்றால் அவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று, தொடங்க இருக்கும் குரூப்பின் அட்மின் யார்? குரூப்பின் நோக்கம் என்ன? குரூப்பில் எத்தனை பேர் இணைய இருக்கிறார்கள் உள்ளிட்ட முழு விவரங்களையும் கொடுத்து, அதை காவல் அலுவலர்களால் பரிசோதித்த பின்னரே வாட்சப் குரூப்கள் தொடங்க முடியும் என்ற புது விதியை உருவாக்கியுள்ளார்கள்.

காஷ்மீரைத் அடுத்து மற்ற மாநிலங்களிலும் இதைப் பின்பற்றினால் நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்கள் குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்