காரமான காரைக்குடி கோழி வறுவல் செய்யலாமா?

Advertisement

மழைக்காலம் ஆரம்பிச்சாசு நாக்கு சூடான காரமான உணவுகளையே நாடும். இந்நிலையில் வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய கோழி வறுவல் தான் இது. சரி எப்படி செய்வதென்று பார்ப்போம். அதோடு உங்க வீட்டில் இருப்பவர்களையும் கோழிவறுவல் செஞ்சி அசத்துவோம்.

தேவையானப் பொருட்கள்:

சிக்கன்                      -               1 கிலோ

சீரகம்                         -               1 டீஸ்பூன்

சோம்பு                       -               1 டீஸ்பூன்

கடுகு                          -               1 டீஸ்பூன்

உளுந்து                      -               1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்      -               5

நெய்                            -               1 ஸ்பூன்

எண்ணெய்                 -               2 ஸ்பூன்

மஞ்சள் தூள்               -               அரை டீஸ்பூன்

மிளகுத்தூள்                -               1அரை டீஸ்பூன்

பூண்டு                         -               6 பல்

உப்பு, கறிவேப்பிலை  -               தேவையானது.

செய்முறை:

எலும்பு நீக்கப்பட்ட சிக்கனைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெயையும், நெய்யையும் கலந்து ஊற்றிச் சூடானதும் கடுகு, உளுந்து, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பூண்டு இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு பொரிக்கவும்.

பிறகு சுத்தம் செய்த சிக்கனில் மஞ்சள் தூளைத் தூவி, ஐந்து நிமிடம் நன்றாகக் கிளற வேன்ண்டும். பிறகு 1 கப் தண்ணீர் ஊற்றி, அடிக்கடி கிளறிவிட்டு தண்ணீர் வற்றும் வரை வேகவைக்கவும். தண்ணீர் முழுவதுமாகச் சுண்டியதும் மிளகுத்தூளைத் தூவி, சுருளக் கிளறி, எண்ணெய் மேலாக மினுமினுக்கும் போது இறக்கவும். சுவையான “காரைக்குடி கோழி வறுவல்” தயார்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>