ஆரோக்கியமான மாலை நேர கோதுமைமாவு குழிப்பணியாரம்

ஆரோக்கிய மாலை நேர கோதுமைமாவு குழிப்பணியாரம்

by Vijayarevathy N, Oct 5, 2018, 19:54 PM IST

எல்லா உணவுகளையும் ஆரோக்கியமான உணவு என்று சொல்லிவிட முடியாது. நாம் மாலைநேரங்களில் அதிகளவு பானிப்பூரீ போன்ற உணவுகளை உட்கொள்கின்றோம். இதனால் உடல் கெட்டு மருத்துவமனை செல்கிறோம். இங்கே நாங்கள் குறிப்பிட்ட உணவு ஆரோக்கியமான ஒன்று. அதோடு அனைத்து வயதினரும் பயமில்லாமல் உண்ணக்கூடியவை.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு            -               ஒரு கப்

உருளைக்கிழங்கு           -               1

பெரிய வெங்காயம்         -               1

பட்டாணி                  -               கால் கப்

மிளகாய்தூள்               -               ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு                      -               சுவைக்கேற்ப

செய்முறை:

உருளைக்கிழங்கையும் பட்டாணியையும் வேகவைக்கவும்.

உருளைக்கிழங்கை தோல் உரித்து, வெங்காயம், மிளகாய்தூள், சிறிது உப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

கோதுமை மாவில் உப்புக் போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

உருட்டி வைத்துள்ள மசாலா உருண்டைகளை, கோதுமை மாவில் தோய்த்து, குழிப்பணியாரக் கல்லில் எண்ணெய் விட்டு, கோதுமை உருண்டைகளை அதில் போட்டு, சிறிது நேரம் கழித்து திருப்பி விடவும்.

கொஞ்சம் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் உருண்டைகளை எடுக்க வேண்டும்.

You'r reading ஆரோக்கியமான மாலை நேர கோதுமைமாவு குழிப்பணியாரம் Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை