நவராத்திரி ஸ்பெஷல்: மொறு மொறுப்பான பருப்பு வடை.

Navratri Special Crispy dal vadai

by Vijayarevathy N, Oct 9, 2018, 20:20 PM IST

நவராத்திரியின் முதல்நாளான இன்று, அம்மனுக்கு உகந்த நெய்வேத்யம் செய்து படைப்பது நல்லது. அதில் மொறு மொறுப்பான வடையை செய்து ஆண்டவனுக்கு படைத்து அவன் அருளைப் பெறுங்கள்.

தேவையான பொருட்கள் : -

கடலைப்பருப்பு - 1 கப்

சின்ன வெங்காயம் - 1/2கப்

கருவேப்பிலை - சிறிது(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)

புதினா - சிறிது(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)

கொத்தமல்லி தழை - சிறிது(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - பொரிப்பதற்கு

அரைக்க :-

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 2 பல்

பச்சை மிளகாய் - 1

காய்ந்த மிளகாய் - 1

சோம்பு - 1 / 2 தேக்கரண்டி

பட்டை - 2

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

செய்முறை :

பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.பின்னர் தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு, ஒரு மேசைக்கரண்டி பருப்பை தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதமுள்ள பருப்பை கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தனியாக கரகரப்பாக அரைத்து, அரைத்து வைத்துள்ள பருப்புடன் சேர்க்கவும்.இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, புதினா, கருவேப்பிலை, தனியாக எடுத்து வைத்த பருப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.கைகளால் சிறு சிறு வடையாகத் தட்டி காயும் எண்ணையில் போட்டு, மிதமான சூட்டில் மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும்.

குறிப்பு :-

அரைத்து வைத்துள்ள பருப்புடன் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்தால் வடை மிகவும் மொறு மொறுப்பாக இருக்கும்.வடை செய்வதற்கென தனியாக பருப்பு கிடைக்கும்.அதை வடை செய்வதற்கு பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.

You'r reading நவராத்திரி ஸ்பெஷல்: மொறு மொறுப்பான பருப்பு வடை. Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை