கண்ணாடி போன்ற பளிங்கு முகத்திற்கு!!!

beauty tips for fair skin

Oct 21, 2018, 11:50 AM IST

இயற்கையின் படைப்பில் அனைத்துமே அழகுதான். அழகை சீராக பராமரிப்பதன் மூலம் தான் ஆரோக்கியமான அழகை பெறமுடியும்.

நமது உடலின் உள்ளே நோயின் தாக்கம் இருந்தால், அதன் வெளிப்பாடு முகம் மற்றும் சருமப் பகுதிகளில் தெரியும்.

இன்றைய நாகரீக உலகில் காற்றும், நீரும் மாசடைந்துள்ளன. மேலும் வாகன புகைகளின் காரணமாக, உடல் அலர்ஜி உண்டாகி சருமப் பாதிப்பு உண்டாகிறது.

சிலருக்கு எவ்வளவுதான் சோப்பு போட்டு முகம் கழுவினாலும் முகத்தில் எண்ணெய் பசை மாறாது.

இவர்கள் கடைந்த மோரை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து பின் இளம்சூடான நீரில் கழுவி வந்தால் எண்ணெய் வழியும் சருமம் மாறும்.மேலும், தினமும் உணவில் கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அஜீரணக் கோளாறு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். அதுபோல் வாயுவை அதிகரிக்கக் கூடிய உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக கெமிக்கல் அல்லாத மூலிகை சோப்புகளை பயன்படுத்துவது நல்லது.

சிலருடைய முகம் எப்போது பார்த்தாலும் இருண்டே காணப்படும். இவர்கள் முட்டைகோஸ் மற்றும் காரட் போன்றவற்றின் வேகவைத்த தண்ணீரை கீழே கொட்டிவிடாமல் அதை ஆறவைத்து முகம் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.

கருப்பு திராட்சையின் விதைகளை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊறவைத்து பின் நீர் கொண்டு கழுவி மென்மையான பருத்தி துண்டால் முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் பருக்கள் குறையும்.

சிலருக்கு புருவங்கள் அடர்த்தியாக வளராமல் விட்டு விட்டு மெலிதாக வளர்ந்திருக்கும்.

இவர்கள் தேங்காய் பாலை காய்ச்சி எடுத்த எண்ணெயை புருவங்களின் மீது தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும். அல்லது விளக்கெண்ணெய் தடவி வந்தால் புருவம் அடர்த்தியாக வளரும்.

You'r reading கண்ணாடி போன்ற பளிங்கு முகத்திற்கு!!! Originally posted on The Subeditor Tamil

More Aval News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை