அசைவ பிரியர்களே.. உங்களுக்கான காடை மசாலா ஃப்ரை ரெசிபி

Kaadai Masala Fry recipe

Nov 27, 2018, 21:09 PM IST

அசைவ பிரியர்களுக்காக இன்னைக்கு காடை மசாலா ஃப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

காடை - 4
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - 1
மரசெக்கு நல்லெண்ணய் - 1/4 கப்

மசாலா அரைக்க:

சின்ன வெங்காயம் -15
இஞ்சி -1 இன்ச்
பூண்டு பற்கள் - 6
நாட்டு தக்காளி -2 ( பொடியாக நறுக்கியது)
மரச்செக்கு கடலெண்ணய் -1 தேக்கரண்டி

வறுத்து பொடி செய்ய:

பட்டை - 2 இன்ச்
கிராம்பு - 3
அண்ணாச்சி மொக்கு - 2
மராட்டிய மொக்கு - 1
கொத்தமல்லி விதைகள் -1 கைப்பிடி
வரமிளகாய் - 8
குரு மிளகு - 2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
கசாகசா - 2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 15
தேங்காய் துருவல் - 1/2 கப்

செய்முறை:

காடையை நன்றாக சுத்தம் செய்து, நன்கு தண்ணீரில் கழுவி எடுத்து வைக்கவும்.

ஒரு வடசட்டியில் கடலெண்ணய் விட்டு நன்றாக காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயம் போட்டு பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும், பின்பு இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு அதை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக நைசாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

இப்பொழுது வடைச்சட்டியில் எண்ணெய் விடாமல் பட்டை, கிராம்பு, அண்ணாச்சி மொக்கு, மராட்டிய மொக்கு, கொத்தமல்லி விதை, வரமிளகாய், குரு மிளகு, சோம்பு, கசகசா, முந்திரி பருப்பு மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வறுத்து அதை மிக்ஸியில் போட்டு நன்றாக நைசாக பொடியாக அரைத்து கொள்ளவும்.

வடச்சட்டியில் மரச்செக்கு நல்லெண்ணய் ஊற்றி காய்ந்ததும் அதில் பிரிஞ்சி இலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.அதில் உப்பு தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

நன்றாக சுத்தம் செய்து கழுவி வைத்துள்ள காடையை சேர்த்து 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும். அதில், பொடி செய்து வைத்துள்ள மசாலா பொடியையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். வடச்சட்டிக்கு மூடியை மூட தேவையில்லை.

கறி நன்றாக வெந்ததும் சிறுதீயில் வைத்து நன்றாக கொதிக்க வைக்கவும். மசாலா நன்றாக சுண்டி எண்ணெய் தேவையெனில் ஓரங்களில் சேர்த்து கிளறவும்.

ஒரு சிறிய வடச்சட்டி வைத்து அதில் ஒரு கைபிடி கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். இதனை, காடை மசாலாவில் சேர்த்து இறக்கவும்.

அவ்ளோதாங்க, சுவையான காடை மசாலா ஃப்ரை ரெசிபி ரெடி.

You'r reading அசைவ பிரியர்களே.. உங்களுக்கான காடை மசாலா ஃப்ரை ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை