சூப்பர் ஈவினிங் ரெசிபி.. மரவள்ளிக்கிழங்கு வடை !

Maravallikizhangu Vadai recipe

by Isaivaani, Dec 3, 2018, 23:31 PM IST

மழைக்கு ஏற்ற சூப்பரான ஈவினிங் ரெசிபி மரவள்ளிக்கிழங்கு வடை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ
வெள்ளை மா - 1/4 கப்
பெருஞ்சீரகம் - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 நெட்டு( சிறிதாக அரிந்து)
உப்பு -தேவையான அளவு
பச்சை மிளகாய் -2-3 (வெட்டி)
வெங்காயம் - 1/2 கப் ( நறுக்கியது)
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை :

மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி கழுவி, கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும்.

அத்துடன், மேலே 0குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வடை பதத்திற்கு குழைக்கவும்.

எண்ணெய்யை சூடாக்கி , வடைகளை தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமானதும் வடித்து எடுத்துக்கொள்ளவும்.

அவ்ளோதாங்க, சூடாகப் பரிமாற மாலை நேர சிற்றுண்டி ரெடி !

You'r reading சூப்பர் ஈவினிங் ரெசிபி.. மரவள்ளிக்கிழங்கு வடை ! Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை