ஹேக் செய்யப்பட்ட ஃகோரா இணையப்பக்கம் - பயனர்களின் தகவல்கள் திருட்டு

Quora website hacked users information theft

by Devi Priya, Dec 4, 2018, 17:41 PM IST

அமெரிக்காவில் ஃகோரா இணையப்பக்கம் ஹேக் செய்யப்பட்டு பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

அறிவுசார் இணையமான ஃகோரா பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கமான பதில் அளிக்கும். இதுபோன்று பல கோடி பயனர்களை வைத்துள்ள ஃகோரா இணையப்பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு பேஸ்புக்கில் பணிபுரிந்த இரு ஊழியர்களால் இந்த இணையப்பக்கம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் 10 கோடி பேரின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள் ஆகியவை திருடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தகவல்கள் திருடப்பட்டுள்ள பயனர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து பயனர்களையும் லாக் அவுட் செய்துள்ளதாகவும் ஃகோரா கூறியுள்ளது.

You'r reading ஹேக் செய்யப்பட்ட ஃகோரா இணையப்பக்கம் - பயனர்களின் தகவல்கள் திருட்டு Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை