மொறு மொறு வெஜ் ப்ரெட் ரோல்ஸ் ரெசிபி!

Roasted veg bread rolls Recipe

by Isaivaani, Dec 7, 2018, 22:46 PM IST

குழந்தைகள் ஸ்கூலுக்கு போயிட்டு வந்ததும் அவர்களுக்கு பிடித்தமான மற்றும் ஆரோக்கியமான சூப்பர் ஸ்னாக் செஞ்சி கொடுக்கணும் இல்லையா.. குழந்தைகளுக்கு பிடித்த மொறு மொறு வெஜ் ப்ரெட் ரோல்ஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

ப்ரெட் - 10
கேரட் - ஒன்று
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பச்சை மிளகாய் - 1
கடுகு - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
சீஸ் - 3 ஸ்லைஸ்

செய்முறை:

குக்கரில் தண்ணீர் ஊற்றி கேரட், உருளைக்கிழங்கை போட்டு வேக விடவும். வெந்ததும் எடுத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
அதில் மசித்த உருளை, கேரட் கலவையை சேர்த்து பிரட்டவும்.

கலவை ஒன்று சேர்ந்ததும் ஆறவைத்து கொழுக்கட்டைகள் போல் உருட்டிக் கொள்ளவும். ப்ரெட்டின் ஓரங்களை நீக்கி விடவும். கையை தண்ணீரில் நனைத்து ப்ரெட்டின் இரு புறங்களிலும் வைத்து அழுத்தவும்.

ப்ரெட்டின் மேல் சீஸை தூவி விடவும். ப்ரெட்டின் ஒரு ஓரத்தில் மசாலா கலவையை வைத்து அப்படியே சுருட்டவும்.

பின்னர் இரண்டு ஓரங்களையும் தண்ணீர் தொட்டு கொண்டு மூடி விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் ப்ரெட் ரோலை போட்டு பொரித்து எடுக்கவும்.

அவ்ளோதாங்க, சுவையான மொறுமொறு ப்ரெட் ரோல்ஸ் ரெடி.

You'r reading மொறு மொறு வெஜ் ப்ரெட் ரோல்ஸ் ரெசிபி! Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை