கருப்பரிசி சர்க்கரைப் பொங்கல்.. ஹெல்த்தி ரெஸிபி..

Advertisement

பொங்கலுக்கு வகை வகையான பொங்கல் செய்ய ரெடியா..
தைத் திருநாளின் முதல் நாளான பெரும் பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷலே இனிப்பு பொங்கல் தான். வருஷம் வருஷம் இனிப்பு பொங்கல் தானே செய்றோம். இந்த வருஷம் பொங்கலுக்கு விதவிதமான பொங்கல் செய்து அசத்துவோம். ரெடியா..?

இப்போ கருப்பரிசி சர்க்கரைப் பொங்கல் எப்படி செய்றதுனு பார்ப்போம்..

தேவையானவை:

கருப்பரிசி _ ஒரு கப்
பச்சைப் பருப்பு _ 1/4 கப்
உப்பு _ துளிக்கும் குறைவாக‌ (சுவைக்காக‌)
வெல்லம் _ ஒரு கப்
பால்_1/4 கப்
தேங்காய்ப் பூ_2 டீஸ்பூன்
நெய்_2 டேபிள்ஸ்பூன்
முந்திரி _ 10
ஏலக்காய்_1

செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலில் சூடுவர வறுத்துக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்து வைக்கவும்.

பருப்புடன் கருப்ப‌ரிசியை சேர்த்துக் கழுவிவிட்டு, ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, பெயருக்கு துளிக்கும் குறைவாக உப்பு போட்டு, நன்றாக வேக வைக்கவும். நன்றாக வெந்த பிறகு பாலை விட்டு தீயை சிம்மில் வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி,வெல்லம் கரைந்ததும், மண் & தூசு போக வடிகட்டிவிட்டு, மீண்டும் அடுப்பில் ஏற்றி வெல்லத் தண்ணீர் நன்றாக நுரைத்துக்கொண்டு வரும்போது எடுத்து சர்க்கரைப் பொங்கலில் கொட்டி நன்றாகக் கிளறிவிடவும்.

பிறகு தேங்காய்ப் பூ, பொடித்து வைத்துள்ள ஏலக்காய் சேர்த்துக் கிளறவும். அடுத்து நெய்யில் முந்திரியை வறுத்து பொங்கலில் சேர்த்துக் கிளறிக்கொடுத்து இற‌க்கவும். இப்போது சுவையான கருப்பரிசி பொங்கல் தயார்.

கடைசியில் ஒரு சிறு குறிப்பு:

நெய்யில் முந்திரியை வறுத்துக்கொண்டு அதிலேயே பொங்கலைக் கொட்டிக் கிளறி எடுத்தால் இன்னும் சுவையாக இருக்கும். அது வேறொன்றுமில்லை, நெய் முழுவதும் சேர்வதால் சூப்பர் சுவையுடன் இருக்கும்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>