வாசிப்பு பிரியரா நீங்கள்? உங்களுக்கேற்ற கிண்டில் இதுதான்!

'வாசிப்பு ஓர் இயக்கம்' என்பார்கள். 'புத்தகமே சிறந்த நண்பன்' என்றும் ஒரு கூற்று உண்டு. புத்தக பிரியர்களுக்கான தொழில்நுட்ப வசதியே கிண்டில்!
புத்தகங்களுக்கான காகிதம், அச்சு ஆகிய பெரிய முதலீடுகள் தவிர்க்கப்படுவதால், ஒப்புநோக்க குறைந்த விலையிலேயே கிண்டிலில் புத்தகங்கள் வாசிக்கக் கிடைக்கின்றன.

2007ம் ஆண்டு அமேசான் நிறுவனம் கிண்டிலை அறிமுகப்படுத்தியது. காலப்போக்கில் அது மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், மராத்தி. ஹிந்தி ஆகிய இந்திய மொழிகளிலும் ஜெர்மன், மாண்டரின் உள்பட பல்வேறு நாடுகளின் மொழிகளில் அமேசான் கிண்டிலில் புத்தகங்கள் கிடைக்கின்றன.

'என்ன இருந்தாலும் புத்தகத்தின் பக்கங்களை அப்படியே வருடி, வாசிப்பது போன்ற உணர்வை கிண்டில் தருவதில்லை' என்பவர்களும் உள்ளனர். கிண்டில் அப்படியே புத்தகம் வாசிக்கும் உணர்வை அளிக்கும் என்று வாதிடுவது நம் நோக்கமல்ல. மாறி வரும் தொழில்நுட்ப தலைமுறைக்கு ஏற்ப வாசிப்பை எளிதாக்குவதில் கிண்டிலும் பங்கு வகிக்கிறது என்பது மறுக்க இயலாத ஒன்று.

2018ம் ஆண்டு சந்தைக்கு வந்த கிண்டில் பேப்பர் ஒயிட் 2018 பயன்படுத்துவதற்கு ஏற்றது. குறைந்த எடை, சரியான அளவு, பயன்படுத்த எளிதானது, போதுமான சேமிப்பளவு, அதிக திறன் கொண்ட மின்கலம், வாங்கக்கூடிய விலை போன்ற காரணிகளை கொண்டு பார்க்கும்போது வாசகர்களுக்கு ஏற்றது இது என்று கூறப்படுகிறது.

4ஜி இணையதொடர்பு கொள்ளக்கூடிய 8 ஜிபி சேமிப்பளவு கொண்ட வைஃபை வசதி கொண்ட கிண்டில் பேப்பர் ஒயிட் 12,999 ரூபாய் விலையிலும் 32 ஜிபி சேமிப்பளவு கொண்ட கிண்டில் பேப்பர் ஒயிட் 17,999 ரூபாயிலும் கிடைக்கிறது.
புத்தகம் வாசித்த உணர்வை அப்படியே கொடுக்காவிட்டாலும் பரந்த வாய்ப்பு, முக்கியமானவற்றை புத்தகத்தில் அடிக்கோடு இடுவது போன்று வித்தியாசப்படுத்தி காட்டக்கூடிய வசதி ஆகியவை கிண்டிலையும் உங்கள் இருதயத்திற்கு பரிச்சயமாக்கும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்
Tag Clouds