மதுரையில் தேவர் சிலைக்கு எடப்பாடி, ஸ்டாலின் மாலையணிப்பு

Edappadi, M.K.Stalin garlanding muthuramalinga thevar statue in madurai

by எஸ். எம். கணபதி, Oct 30, 2019, 10:48 AM IST

மதுரையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வவர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112வது ஜெயந்தி விழா, 57 குருபூஜை விழா, பசும்பொன்னில் சிறப்பாக நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மதுரைக்கு வந்துள்ளனர். இவர்கள் சாலை வழியாக கமுதிக்கு அருகில் உள்ள பசும்பொன்னிற்கு செல்கிறார்கள்.

அதற்கு முன்பாக, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவ வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதே போல், முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Madurai News

அதிகம் படித்தவை