மேயருக்கு மறைமுக தேர்தல்.. ஐகோர்ட் கிளையில் முறையீடு..

by எஸ். எம். கணபதி, Nov 21, 2019, 13:11 PM IST

மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தும் சட்டத்திற்கு எதிராக மதுரை ஐகோர்ட் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகளும், 125 நகராட்சிகளும், 529 பேரூராட்சிகளும் உள்ளன. இது தவிர, ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகளிலுமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான பதவிகள் உள்ளன. அடுத்த மாதம் 13ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்களுக்கு மக்களே வாக்களிக்குமாறு நேரடி தேர்தல் நடத்தப்படும் என்று அதிமுக அரசு கடந்த ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டிருந்தது. ஆனால், திடீரென நேற்று முன் தினம் ஒரு அவசரச் சட்டத்தை தமிழக அரசு வெளியிட்டது.

இதன்படி, மேயர் மற்றும் தலைவர்களுக்கான தேர்தலை மறைமுகத் தேர்தலாக மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, கவுன்சிலர்களே மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்வார்கள்.

இந்த மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட் மதுரைக் கிளையில் இன்று(நவ.21) வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்தார். அதற்கு நீதிபதி, இதை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து, ஐகோர்ட் மதுரைக் கிளை நாளை அந்த மனுவை விசாரிக்க உள்ளது.


Leave a reply