ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க புதிய தொழில்நுட்பம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அறிமுகம் !

Madurai University introduced New technology to prevent students from looking at and copy writing in online exams.

by Balaji, Oct 3, 2020, 13:11 PM IST

ஆன்லைன் தேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனி அடையாள அட்டை வசதிகளுடன் தேர்வு காமராசர் பல்கலைக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.ஆன்லைன் தேர்வுகளில் நடக்கும் குளறுபடிகளைத் தவிர்க்க புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் தேர்வு எழுதவும் அதற்கு உடனடியாக முடிவுகளும் கிடைக்கும் வகையில் த்தில் மின்னணு சங்கிலி என்ற புதிய தொழில்நுட்பத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழக கணித அறிவியல் துறை அறிமுகம் செய்துள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் கிருஷ்ணன்,இதன்படி
கியூ ஆர் கோட் எனப்படும் கணினி குறியீட்டுத் தொழில்நுட்பம் தெருவில் பயன்படுத்தப்பட உள்ளது. தேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு கியூ ஆர் கோடு வழங்கப்படும். அதில் நான்கு வகையான வினாத்தாள்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இதன்படி ஒரு அட்டையில் ஏ,பி, சி, டி என நான்கு வகையான வினாக்கள் குறிக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் அந்த தேர்வுக்குரிய வினாவைத் தேர்வு செய்து செல்போன் மூலம் தங்கள் கைகள் அல்லது முகங்கள் தெரியும் அளவிற்கு உடனடியாக பதிவு செய்ய முடியும் இதன்மூலம் அவர்கள் எழுதும் விடைகள் உடனுக்குடன் நிமிடங்களிலேயே அவர்கள் பெற்ற மதிப்பெண்ணையும் அறிந்து கொள்ள முடியும்.

ஆன்லைனில் அதற்கேற்ற வகையில் இந்த புதிய தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது மாணவர்கள் காப்பி அடிப்பதாகப் பக்கத்தில் உள்ள அவருடன் உரையாடுவது கேள்வி கேட்பது பதில் சொல்வது போன்றவை இதன் மூலம் தவிர்க்கப்படும்.உடனுக்குடன் பதில் அளிப்பதும் சரியான பதிலுக்கு உரிய மதிப்பெண் அளிப்பது என உடனுக்குடன் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுத் தேர்வு முடிந்ததும் உடனடியாக தேர்வு முடிவுகளும் அறிவிக்கக் கூடிய வகையில் மென்பொருளுடன் ளை கூடிய இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் மாணவர் கள் காப்பி அடித்தல் மற்றும் குழுவாகச் சேர்ந்து தேர்வு எழுதுதல் போன்ற விஷயங்கள் தவிர்க்கப்படும்.

பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் இது குறித்துக் கூறுகையில், இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஒரே சமயத்தில் 2000 மாணவர்கள் வரை தேர்வு எழுத முடியும். அதற்கேற்ற வகையில் இந்த தொழில்நுட்பம் வடிவ அமைக்கப்பட்டுள்ளது.இதற்காக அவர்கள் மொபைல் போன் மூலம் ஆன்லைனில் இணைப்பு பெற்றால் உடனடியாக தேர்வு எழுதவும், தேர்வு முடிந்த அடுத்த நிமிடமே முடிவுகளைத் தெரிந்து கொள்ளவும் முடியும். அனைத்து தரப்பு மாணவர்களும் பயனடையும் வகையில் இந்தப் புதிய தொழில்நுட்பம் அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தத் தொழில்நுட்பத்தில் சில சிறிய அளவிலான குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வருங்காலங்களில் அனைத்து கல்வி குழுமங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் தேர்வுகளை நடத்தும் வகையில் வகையில் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த தொழில்நுட்பத்தை மதுரை காமராசர் பல்கலைக்கழக கணிதவியல் துறை பேராசிரியர் மேசக் பொன்ராஜ் வடிவமைத்து அறிமுகப்படுத்தி உள்ளார்.இந்த முறையில் தேர்வுகள் நடத்தப்படும்போது தேர்வர்கள் யாரிடமும் பேச முடியாது. மீறிப் பேசினால் இணையதளம் மூலம் கட்டுப்பாட்டுக் கணினிக்குத் தெரிந்துவிடும். இந்தத் தேர்வு முறையில் தேர்வர்கள் வலது கையில் செல்லிடப்பேசியை வைத்திருக்க வேண்டும். இடது கையில் எஸ்.எஸ்.சி. எனப்படும் ஸ்மார்ட் அண்ட் செக்யூர் கார்டு என்ற மின்னணு கருவி வைத்திருக்க வேண்டும்.தேர்வு நடைபெறும்போது ஒவ்வொரு கேள்வியும் ஒரு நிமிடம் மட்டுமே செல்போனில் காண்பிக்கப்படும். தேர்வின்போது தேர்வர்களின் அருகில் உள்ள நண்பர்கள், பெற்றோர் அருகில் சென்று வினாவைப் படிப்பது அல்லது உதவிகள் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டால் கண்காணிப்பு கேமரா படம் எடுத்துத் தேர்வு கட்டுப்பாட்டுக் கணினிக்கு அனுப்பிவிடும்.

இரண்டு கைகளுக்கும் இடையே சுமார் ஒரு அங்குலத்திற்கு குறைவான தூரம் உள்ளதால் இந்தத் தொழில்நுட்பத்திற்கு 'மின்னணு சங்கிலி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் புத்தகங்களைப் புரட்டுவதற்கு வாய்ப்பில்லை.ஒவ்வொரு கல்விக்கும் அவரது எஸ்.எஸ்.சி. உபகரணம் மூலம் கைரேகையையும் காணொலி மூலமாகப் பதிவுசெய்யப்படும். இதனால் தேர்வில் ஆள்மாறாட்டம் போன்ற செயல்கள் இனி எடுபடாது. . கணினி மூலம் நடத்தப்படும் தேர்வுகளை ஒப்பிடுகையில், செல்போன் மற்றும் எஸ்.எஸ்.சி. முறையில் நடத்தப்படும் தேர்வுகளால் செலவும் மிகக்குறைவு.

தேர்வு எழுதும் போது இணைய இணைப்பு கிடைக்காவிட்டால் தேர்வர்கள் செல்போனை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று இணைப்பு கிடைக்கும் இடத்தில் வைத்துத் தேர்வில் பங்கேற்கலாம்.இந்தப் புதிய தொழில்நுட்பம் குறித்து காமராசர் பல்கலைக்கழகம் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.

You'r reading ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க புதிய தொழில்நுட்பம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அறிமுகம் ! Originally posted on The Subeditor Tamil

More Madurai News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை