மதுரை - மும்பை மீண்டும் விமானம் சேவை துவக்கம்...!

Flight service from Madurai to Mumbai resumes from October 25

by Balaji, Oct 19, 2020, 15:56 PM IST

கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானச் சேவைகளை மீண்டும் படிப்படியாகத் தொடங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம், வரும் 25ந்தேதி முதல் மதுரையிலிருந்து மும்பைக்கு மீண்டும் விமானச் சேவை இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாதம் 24ந்தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. . தற்போது படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பொது முடக்கம் நவம்பர் 31 ந்தேதி வரை அமலில் இருக்கும் என தெரிக்கிறது .

இதனிடையே , கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி முதல் மதுரையிலிருந்து சென்னை வழியாக மும்பைக்கு நடைபெற்று வந்த தினசரி விமானச் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இந்த வழித்தடத்தில் மீண்டும் விமானச் சேவை தொடங்குவதாக ஏர் இந்தியா நிறுவனம் .இதன்படி , மும்பை- சென்னை- மதுரை- சென்னை-மும்பை விமானச் சேவையும் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறது. காலை 9.15 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு, காலை 11.15 மணிக்குச் சென்னை வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து 12.15 மணிக்குப் புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு மதுரையும்.

பின்னர் அதே விமானம் மதுரையிலிருந்து மதியம் 1.55 மணிக்குப் புறப்பட்டு மதியம் 3 மணிக்குச் சென்னைக்கும் அங்கிருந்து மாலை 4.05 மணிக்குப் புறப்பட்டு மீண்டும் 6.15 மணிக்கு மும்பையைச் சென்றடைகிறது.தினமும் இதே நேரத்தில் இந்த விமானம் இயக்கப்படுகிறது. பயணிகளின் வருகையைப் பொறுத்து விமானச் சேவைக்கான கட்டணத்தில் மாறுபாடு இருக்கும் என்று தெரிகிறது.

இதற்கான டிக்கெட்டுகளுக்கு www.airindia.in என்ற இணையதளத்திலும், மதுரை விமான நிலையத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

More Madurai News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை