பிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்..

TV Actress Zarina Roshan Khan Passes Away

by Chandru, Oct 19, 2020, 15:49 PM IST

கொரோனா வந்தாலும் வந்தது எல்லோரையும் ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பில் சிலர், வயது முதிர்வில் சிலர், விபத்தில் சிலர், தற்கொலை செய்தும் சிலர் எனப் பிரபலங்கள் பலர் கடந்த ஐந்தாறு மாதங்களில் மரணத்தைத் தழுவி இருக்கின்றனர்.பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான்கான், கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம். மற்றும் சில டிவி நடிகர்கள், மூத்த இசை அமைப்பாளர்கள் மரணம் அடைந்தார்கள்.

ஜீ டிவி மற்றும் பாலிமர் டிவியில் ஒளிபரப்பான இனிய இரு மலர்கள், இரு மலர்கள் போன்ற தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் ஜரினா ரோஷன் கான். மேலும் கும் கும் பாக்யா இந்தி படத்திலும் நடித்திருக்கிறார். ஜரினா ரோஷன் கான் திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54. இந்த தகவலை சீரியல் ஹீரோ ஷபீர் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இரங்கல் தெரிவித்திருக்கிறார். ஜரினா ரோஷன் கான் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பாக ஸ்டண்ட் உமனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஜரினா கான் மறைவுக்கு இந்தி டிவி சீரியல் நடிகைகள் ஸ்ரிதி மற்றும் சபிர் அஹுலுவாலா போன்ற பலர் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை