மதுரை எய்ம்ஸ்க்காக ஏற்கெனவே நிலம் ஒப்படைப்பு... உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக 223 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப் பட்டு விட்டது தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தவறான தகவல் தந்த அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் எய்ம்ஸ்

மருத்துவமனைக்கு இடம் கொடுக்கப்படவில்லை என்பது குறித்து
பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் எந்த பணிகளும் நடைபெறவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தென் தமிழகம் மற்றும் கேரள மாநில மக்கள் பெரும் பயன் அடைவார்கள். மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் மாணவர்களுக்குக் கூடுதல் ஒதுக்கீடு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும் தற்போது கொரோனா தொற்று காரணமாகப் பல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அளவுக்கு அதிகமாகப் பணம் வசூல் செய்யும் சூழலில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திருந்தால் ஒரே நேரத்தில் பல ஆயிரம் மக்கள் சிகிச்சை பெற்றுப் பயன்பெற்றிருப்பார்கள். ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும் எந்த பணிகளும் நடைபெறவில்லை. ஆகவே, மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதியை ஒதுக்கி, பணியைத் துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலம் தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை என ஆர்.டி.ஐ .தகவல் மூலம் தெரியவந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. அடிக்கல் நாட்டப்பட்டு 1 வருடம் 8 மாதமாகிறது. கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று இருக்கவேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தமிழக அரசிற்கு விருப்பமில்லையா? என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் கையகப்படுத்துவதில் பிரச்சனை உள்ளது என்று தெரிவித்தார். மேலும் வழக்கை விவாதிக்கத் தலைமை வழக்கறிஞர் வரவுள்ளார் சிறிது நேரம் வழக்கை ஒத்திவைக்கக் கூறினார். பிற்பகலில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் ஆஜராகி தமிழக அரசு எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 223 ஏக்கர் நிலப்பரப்பை மத்திய அரசிடம் ஒப்படைக்கப் பட்டது என்றும் அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.இதனைக் கேட்டு வியப்படைந்த நீதிபதிகள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தமிழக அரசு இன்னும் இடம் ஒப்படைக்கவில்லை என்று கூறி உள்ளது ஆனால் தமிழக அரசு முழுமையாக இடம் ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தவறான தகவலைத் தந்த அந்த அதிகாரி யார்? அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் தமிழக அரசு முழுமையாக இடம் ஒப்படைப்பு செய்யப்பட்டதா என்று மத்திய அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.மத்திய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தமிழக அரசு எய்மஸ்க்கான முழுமையாக இடம் ஒப்படைப்பு செய்யப்பட்டு விட்டது என்றும் தற்போது கட்டுமான பணிகளுக்கான கடன் ஒப்பந்தம் ஜப்பானிய நிறுவனத்துடன் கட்டுமான பணிகளுக்கான கடன் ஒப்பந்தப் பணி நடைபெற்று வருவதாகவும் இந்த பணி மார்ச் 31 2021 ஆம் ஆண்டுக்குள் முடிவடைந்துவிடும் அதிலிருந்து நாற்பத்தி ஐந்து மாதங்களுக்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு விடும் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மத்திய அரசு வழக்கறிஞரிடம் சரமாரியான கேள்விகளை முன்வைத்தனர்.தமிழகத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட அதே சமயம் பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ்காண கட்டுமான பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டது அந்த மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கி விட்டது. தமிழகத்தில் மட்டும் ஏன் கட்டுமானப் பணிகளைத் தொடங்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.பின்னர் கட்டுமான பணிகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகக் கூறி தீர்ப்புக்காக வழக்கைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
group-4-exam-malpractice-high-court-orders-keeping-documents-safe
குரூப்-4 தேர்வு முறைகேடு : ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
female-infanticide-again-araises-in-usilampatti
உசிலம்பட்டியில் மீண்டும் அரங்கேறும் பெண் சிசுக்கொலை
collection-of-doll-fee-without-permission-high-court-issues-new-order-to-madurai-corporation
அனுமதியின்றி சுங்க கட்டணம் வசூல்: மதுரை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
high-court-orders-release-of-aquatic-civic-works-details-on-internet
குடிமராமத்து பணி விவரங்களை இணையத்தில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு
seeking-a-stay-illegal-lending-mobile-apps-case-is-adjournment
கடன் வழங்கும் செயலிகளுக்கு தடை கோரிய வழக்கு தள்ளிவைப்பு
mp-bans-demolition-of-old-buildings-at-madurai-government-hospital
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பழைய கட்டிடங்களை இடிக்க எம்.பி. தடை
priority-in-government-service-for-the-best-bull-catch-player-government-review
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை : அரசு பரிசீலனை
two-arrested-for-black-flag-avanyapuram-at-jallikattu-ground
ஜல்லிக்கட்டு மைதானத்தில் கருப்புக்கொடி அவனியாபுரத்தில் இருவர் கைது
avanyapuram-jallikattu-high-court-orders-to-conduct-with-conditions
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : நிபந்தனைகளுடன் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு...
coincidence-in-the-jallikkattu-festival-committee-case-in-the-high-court
ஜல்லிக்கட்டு விழா குழுவில் சமவாய்ப்பு: உயர் நீதிமன்றத்தில் வழக்கு...!
Tag Clouds

READ MORE ABOUT :