பிரபல மராத்தி பாடகி சாலை விபத்தில் சாவு..

by எஸ். எம். கணபதி, Nov 15, 2019, 10:30 AM IST
Share Tweet Whatsapp

பிரபல மராத்தி பாடகி கீதா மாலி, மும்பையில் கார் விபத்தில் உயிரிழந்தார்.

மராத்தி சினிமா பின்னணி பாடகி கீதா மாலி. தனிப்பட்ட முறையிலும் பல ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார். இவர் அமெரிக்காவுக்கு சென்று விட்டு நேற்று மும்பை திரும்பினார். மும்பையில் இருந்து கீிதா மாலியும், அவரது கணவர் விஜய்யும் ஒரு காரில் தங்களுடைய சொந்த ஊரான நாசிக் நோக்கி சென்றனர்.

சாகாப்பூர் லகேபடா பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கீதா மாலியும், அவரது கணவர் விஜய்யும் பலத்த காயமடைந்தனர். இருவரும் உடனடியாக சாகாப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கீதா மாலி உயிரிழந்தார். விஜய் சிகிச்சை பெற்று வருகிறார்.

கீிதா மாலி உயிரிழந்த சம்பவம் மும்பை திரையுலகில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a reply