திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு கட்சிகளிடையே உடன்பாடு கையெழுத்தானது.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் முன்னிலையில் தமிழக காங்கிரஸ் மற்றும் திமுக முக்கிய தலைவர்களிடையே கூட்டணிப் பேச்சு நடந்து நேற்று இறுதி செய்யப்பட்டது. இன்று சென்னை வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால். தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் விவாதித்த பின் தொகுதி உடன்பாட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் கையெழுத்திட்டனர்.
புதுச்சேரி தவிர்த்து தமிழகத்தில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகள் எவை? என்பது குறித்து இரு கட்சிகளின் குழுவினர் பேசி முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
ஜி.கே.வாசனின் பாசிட்டிவ் வாக்குகள்! கனிமொழி முயற்சிக்குத் தடை போட்ட காங்கிரஸ்