ரொம்ப ஈசியான ரெசிபி தேங்காய் பர்ஃபி எப்படி செய்றதுனு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
ஏலக்காய் - சிறிதளவு
நெய் - சிறிதளவு
முந்திரி - தேவைக்கேற்ப
செய்முறை:
ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து துருவிய தேங்காயையும், சர்க்கரையையும் போட்டு சிறு தீயில் கிளறி வேகவிடவும்.
இது கொஞ்சம் நேரத்தில் சர்க்கரை கரைந்து கெட்டியான பதத்திற்கு மாறும்.
இன்னும் சில நிமிடங்களில் இந்தக் கலவை முழுவதும் நுரைப்பது போல் வந்து பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்.
இந்நிலையில், ஏலக்காய் சேர்க்கவும். விரும்பினால் முந்திரியை பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.
இறுதியாக, நெய்யை ஒரு தட்டில் தடவி தேங்காய் கலவையை கொட்டி ஆறவிடவும்.
லேசான சூடு இருக்கும்போது கத்தியால் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
அவ்வளவுதாங்க சுவையான ஈசியான தேங்காய் பர்பி ரெடி..!