மாணவிகளை சீரழித்த அதிமுக கும்பல்! பொள்ளாச்சி சம்பவத்தில் சிக்கும் அமைச்சர்கள்?

Advertisement

ஃபேஸ்புக் மூலமாக மாணவிகளை பாலியல் வலைக்குள் சிக்க வைத்த விவகாரத்தில், கொங்கு மண்டலத்தில் உள்ள அமைச்சர்கள் சிலர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்த வழக்கில் பிடிபட்ட நான்கு பேரிடம் நடந்த விசாரணையில் மாணவிகளை மிரட்டி எடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வீடியோக்கள் சிக்கியிருக்கின்றன. இந்த வீடியோக்களைப் பார்த்து போலீஸாரே பதறிப்போய் இருக்கிறார்கள்.

இதுதொடர்பான விவரங்களை வெளியில் கசியவிடாமல் ரகசியம் காக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வரும் இந்தக் கொடுமையின் பின்புலத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்கின்றனர் போலீஸார்.

இதைப் பற்றிப் பேசும் போலீஸார், மாணவிகளை காதல் மொழி பேசி வீழ்த்துவதற்கென்றே ஒரு கோஷ்டி செயல்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட மாணவிகளின் நட்பைப் பெறுவதை முதல் வேலையாகவும் அந்த மாணவி வலையில் விழுந்துவிட்டால், நண்பர்கள் மூலமாக சீரழித்து வீடியோ எடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

இந்த வீடியோவைக் காட்டியே அந்த பெண்களை அதிமுகவின் முக்கியப் புள்ளிகளுக்கு சப்ளை செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட அவமானத்தில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள், தற்கொலையை முடிவை நாடியிருக்கிறார்கள். இதில் பணம், நகையை இழந்த பெண்களும் ஏராளம்.

அமைச்சர்கள் முதற்கொண்டு எம்எல்ஏக்கள் வரையில் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். தேர்தல் நெருக்கத்தில் இந்தத் தகவல்கள் வெளியில் வந்தால், கொங்கு பிரதேசத்தில் மண்ணைக் கவ்வுவது உறுதி என்பதால் விவகாரத்தை அடக்கி வாசிக்கச் சொல்லியிருக்கிறார்களாம்.

இந்த விவகாரத்தில் சிக்கிய ஜெயலலிதா பேரவை நிர்வாகியை கஸ்டடியில் எடுத்தால் அமைச்சர்களின் தொடர்புகள் வெளியில் தெரிய வரும். தேர்தல் பணிகளை கவனிப்பதைவிடவும் பாலியல் விவகாரத்தை ஒடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள் பொள்ளாச்சியின் முக்கியமான அதிமுக பிரபலங்கள்.

எழில் பிரதீபன்

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>