சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில் மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி மகன் அன்பழகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சிபிஐ நீதிமன்றம்.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை சென்னை ஆயிரம் விளக்கு இந்தியன் வங்கியில் உள்ள 8 கணக்குகளிலிருந்து, வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு ரூ78 கோடி பணம் அனுப்பி இருந்தார் கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகன்.
முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்த பணம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் மணி அன்பழகன் மீது அமலாக்கப்பிரிவினர் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
தற்போது சென்னை புழல் சிறையில் இருந்து வருகிறார் மணி அன்பழகன். இவ்வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், மணி அன்பழகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ1 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளிப்பது.