தமிழகத்தில் அமமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் 39 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். அமமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூறாவளி பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார்.
எனினும், பொது சின்னம் ஒதுக்கப்படாததால் அமமுக வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரத்துக்குச் செல்ல முடியாமலும் சின்னத்தை விளம்பரப்படுத்த முடியாமலும் தவிக்கின்றனர் எனச் சொல்லப்படுகிறது.
இது குறித்து தினகரன் கூறுகையில், எங்கள் வேட்பாளர்கள் 59 தொகுதிகளில் 59 சின்னங்களில் நின்றாலும் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவார்கள். இப்போது, பொது சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆகையால், எங்கள் துரோகிகளையும், தமிழ்நாட்டின் துரோகிகளையும், எதிரிகளையும் வீழ்த்துவதற்கு அமமுக வேட்பாளர்கள் ஆயுதமாக இருப்பார்கள்’ என்று கூறினார்.