படத்தில் நடித்தால் எழுந்த ஆசையாம்! முதல்வர் கனவு குறித்து பவர் ஸ்டார் ஓப்பன் டாக்

actor power star dream became mp

by Suganya P, Apr 11, 2019, 17:19 PM IST

தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆவது உறுதி என தென் சென்னை தொகுதி வேட்பாளர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் குடியுரிமை தேசிய கட்சி சார்பில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் போட்டியிடுகிறார். தேர்தலில் வெற்றி பெற வேண்டி தீவிரமாக தொகுதி மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார் பவர் ஸ்டார். இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த அவர், ‘தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆவது உறுதி’ என தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், ‘தென் சென்னை தொகுதியில் அதிமுக, திமுக எனப் பெரிய கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன. நாங்கள் புதிதாக களத்தில் இறங்கியுள்ளோம். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அதனால், கண்டிப்பாக தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆவது உறுதி. தேர்தல் நெருங்கி விட்டது. அதனால், 1 நாள் இருந்தால் கூட போதும். தொகுதி முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி விடுவேன்.

போன பட்டத்தில் மத்திய அமைச்சராக நடித்திருந்தேன்; மற்றொரு படத்தில் முதல்வராகவும் நடித்திருந்தேன். அந்த கதாபாத்திரம் மிகவும் பிடித்துப்போனது. நிஜத்திலும் எம்.பி ஆக மாட்டோமா என்ற ஏக்கம் இருந்தது. தற்போது, அது நிஜமாக போகிறது’ என்றார்.

You'r reading படத்தில் நடித்தால் எழுந்த ஆசையாம்! முதல்வர் கனவு குறித்து பவர் ஸ்டார் ஓப்பன் டாக் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை