தொடங்கியது பணப் பட்டுவாடா...! அதிமுகவுக்கு கடினம்..! திமுகவுக்கு..? –சூலூர் தொகுதி

sulur assembly selection report admk no chance dmk have a chance

by Suganya P, Apr 27, 2019, 00:00 AM IST

சூலூர் தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர், உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. இருப்பினும், அதிமுக-திமுகவுக்குதான் நேரடி போட்டி உள்ளதாக தெரிகிறது.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 18 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், அடுத்து இந்த நான்கு தொகுதிகளும் கவனம் பெற்றுள்ளன. எம்.எல்.ஏ கனகராஜ் மறைவால் காலியான சூலூர் சட்டமன்றத் தொகுதி, இந்த தேர்தல் களத்தில் தனி கவனம் பெற்றுள்ளது. இங்கு, திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் கோவை புறநகர் மாவட்ட அம்மா பேரவைத்தலைவர் வி.பி.கந்தசாமி போட்டியிடுகிறார். அமமுக சார்பில் முன்னாள் எம்.பி சுகுமார் நிறுத்தப்பட்டுள்ளார்.

(எஸ்.பி. வேலுமணி , செ.ம வேலுசாமி)

சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் திங்கள்கிழமையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், சூலூர் தொகுதி வேட்பாளர்களின் கள நிலவரம் குறித்து தொகுதி வட்டாரத்தில் கேட்டறிந்தோம். ‘’திமுக வேட்பாளாராக களம் இறக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, சூலூர் தொகுதியில் மிகப்பெரிய பணக்கார வேட்பாளர். 22 முறை திமுக மாவட்ட பொதுச்செயலாளராக இருந்தவர். இவரை எதிர்த்துப் போட்டியிட வி.ஐ.பி. வேட்பாளரை களம் இறக்க வேண்டும், மக்களிடம் செல்வாக்கு நிறைந்த ஒருவரை அதிமுக சார்பாக அறிவிக்க வேண்டும் என எண்ணியபோது, அனைவரும் முன்னாள் கோவை மாநகராட்சி மேயர்  செ.ம வேலுசாமியை நிறுத்தலாம் என்று கூறினார்கள். 

செ.ம வேலுசாமியும் தேர்தலில் போட்டியிட மேலிடத்தை அணுகினார். சூலூர் மக்களிடம் நல்ல பரிச்சயம் ஆனவர் என்பதால் இவர்க்கு ‘சீட்’ வழங்கினால் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு இதில் உடன்பாடு இல்லை. ஏற்கனவே, செ.ம வேலுசாமிக்கும் அமைச்சருக்கும் இடையில் கருத்து மோதல்கள் இருந்ததன் காரணமாகவே, அவரின் மேயர் பதவி பறிக்கப்பட்டதாகப் பேச்சு இருக்கிறது. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட செ.ம வேலுசாமி விருப்பம் தெரிவித்தார். ஆனால், மேலிடத்தில் எஸ்.பி. வேலுமணி கொடுத்த அழுத்தம் காரணமாக அவருக்கு 'சீட்' ஒதுக்கப்படவில்லை. அவருக்கு, பதிலாக  மறைந்த எம்.எல்.ஏ கனகராஜின் சித்தப்பா மகன் வி.பி.கந்தசாமிக்கு ‘சீட்’ கொடுக்கப்பட்டது.

வி.பி.கந்தசாமி அதே தொகுதியை சேர்ந்தவர் என்றாலும், பொங்கலூர் பழனிசாமியுடன் ஒப்பிடும் போது, மக்களிடம் அவ்வளவு செல்வாக்கு அவருக்கு இல்லை. அமமுக சார்பில் முன்னாள் எம்.பி சுகுமார் நிறுத்தப்பட்டுள்ளார். இவர், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர். அதனால், தொகுதிக்கு பெருசா பழக்கம் இல்லாதவர். ஆனால், ஓட்டு பிரிப்பார் என்று நிச்சம் சொல்லலாம். ஏனெனில், இங்கு, தேவர்கள், கவுண்டர் சமூக மக்கள் அதிகம். பிரதான கட்சி சார்பில் இறக்கப்பட்ட வேட்பாளர்கள் கவுண்டர்கள் என்றபோதும், டிடிவி தினகரனுக்காக நிச்சயம் வாக்குகள் பிரியும். தேர்தலுக்காக அதிமுக-திமுக சார்பாக 15 மாவட்டச் செயலாளர்கள் இறக்கப்பட்டு உள்ளனர். அதிமுக சார்பில் பணம் பட்டுவாடா ஏற்கனவே தொடங்கி விட்டது பாரங்க...அமோகமா நடக்குது’’ என்றவர்.,

(பொங்கலூர் பழனிசாமி)

''இந்த தொகுதியில், அமமுக, நாம் தமிழர், பத்து சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். இருப்பினும், அதிமுக-திமுக-வுக்குதான் நேரடி போட்டி. இதில், பொங்கலூர் பழனிசாமிக்கே வெற்றி வாய்ப்பு அமோகமாக உள்ளது. அதிமுக வெற்றிக்காகக் கடுமையாகப் போராடும் என்றும் கூறலாம்’’ என்றார் நம்மிடம்.

சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், தோல்வியைத் தழுவாமல் இருக்க அதிமுக சார்பாகப் பணம் விநியோகம் படு ஜோராக நடந்து வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையம் இதனைக் கண்டுகொள்ளுமா? வெற்றி யாருக்கு என்பதை மே 23ல் தெரியவரும்.

டிடிவி தினகரனுடன் பேசக்கூடாதா? யாருக்கும் அடிமை இல்லை! -ரத்தினசபாபதி 'பளார்'

You'r reading தொடங்கியது பணப் பட்டுவாடா...! அதிமுகவுக்கு கடினம்..! திமுகவுக்கு..? –சூலூர் தொகுதி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை